#BREAKING : 'ஜெயிலர் 2' படத்தின் வெறித்தனமான ட்ரெய்லர் வெளியீடு: ஐமேக்ஸ் திரையில் அக்டோபர் 15-ல் ரிலீஸ்!

1

நெல்சன் இயக்கத்தில் ‘ஜெயிலர் 2’ திரைப்படம் உருவாகி வருகிறது. இதில், நடிகர் ரஜினியுடன் எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு, ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு உள்பட பலர் நடிக்கின்றனர்.

சிறப்புத் தோற்றத்தில் மோகன்லால், சிவராஜ்குமார், ஹிருத்திக் ரோஷன் போன்றோரும் நடிப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜெயிலர் முதல் பாகத்திற்கு இசையமைத்த அனிருத்தே அதன் இரண்டாம் பாகத்திற்கும் இசையமைக்கிறார். படம் அக்டோபர் 15ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இந்நிலையில் படத்தின் ட்ரைலர் சற்று முன் வெளியானது 

கடந்த 2023-ம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘ஜெயிலர்’. ரம்யா கிருஷ்ணன், மிர்ணா, விநாயகன், வசந்த் ரவி உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. அனிருத் இசையமைத்திருந்தார். ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற இப்படம், உலகளவில் ரூ.600 கோடிக்கும் மேல் வசூலித்ததாக கூறப்பட்டது.மீண்டும் ரஜினிகாந்த் - நெல்சன் திலீப்குமார் கூட்டணி இணைந்துள்ளதால், இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. முதல் பாகத்தைப் போலவே இரண்டாம் பாகத்திலும் மோகன்லால், சிவராஜ்குமார் ஆகியோர் முக்கிய கேமியோ கதாபாத்திரங்களில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் ரம்யா கிருஷ்ணன், பாலிவுட் நடிகர் மிதுன் சக்கரவர்த்தி, சந்தானம், சுராஜ் வெஞ்சரமூடு, யோகி பாபு உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

இப்படத்திலிருந்து ‘அல்ல போலேலோ’, ‘ஒன் மூன்... ஒன் சன்’, ஒன் நேம் என்ற பாடல்கள் வெளியாகி வரவேற்பைப் பெற்று வருகிறன்றன. அதனை தொடர்ந்து இந்த படத்தின் இசை ஆல்பம் முழுவதும் வெளியாகி கவனத்தை பெற்று வருகிறது.

ஜெயிலர் 2 பட தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் இந்த படம் ஐமேக்ஸ் திரையில் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வ அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு ரஜினியின் ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Share this story