ரீ-ரிலீஸ் ஆன சந்திரமுகி ஒரிஜினல் வெர்ஷன்!

Manichitharathazh

தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரங்கள் பலர் நடித்த திகில் கலந்த காமெடி திரைப்படமாக கடந்த 2005ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சந்திரமுகி.பி. வாசு இயக்கத்தில்  உருவான இந்த படத்தில் நடிகர் ரஜினிகாந்த், ஜோதிகா, வடிவேல், பிரபு மற்றும் நயன்தாரா ஆகிய பிரபலங்கள் நடித்திருந்தனர். மக்கள் மத்தியில் மாபெரும் வெற்றி பெற்று வசூலில் சாதனையும் படைத்தது. தமிழில் வெளிவந்த சந்திரமுகி, மலையாள படமான மணிச்சித்ரதாழ் என்ற படத்தின் ரீமேக் ஆகும்.

Manichithirathazh

இதன் ஒரிஜினல் வெர்ஷன் 1993ம் ஆண்டு வெளிவந்தது.இந்த படம் ஃபாசில் இயக்கத்தில் மோகன்லால், ஷோபனா, மற்றும் சுரேஷ் கோபி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். தற்போது, 31 ஆண்டுக்கு பிறகு இந்த படம் மீண்டும் ரீ ரிலீஸ் செய்யப்பட்டு மாபெரும் வெற்றி அடைந்துள்ளது. இந்த வெற்றி, இயக்குனர் மற்றும் படக்குழுவினர் அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மேலும், இந்த படம் இரண்டு நாட்களில் ரூ.1.10 கோடி வசூலை குவித்து சாதனை படைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

Share this story