"நான் மன்னிப்பு கேட்கிறேன்... என்னையும் Dheeயையும் ஒப்பிடாதீர்கள்"- பாடகி சின்மயி

பாடகி தீ இன்னும் 15 ஆண்டுகளில் 100 சின்மயி, ஷ்ரேயா கோஷல்களை விழுங்கலாம் என பாடகி சின்மயி கூறியுள்ளார்.
தக் லைப் படத்தில் 'முத்த மழை' என்ற பாடலை தமிழில் Dheeயும், தெலுங்கு, இந்தியில் சின்மயியும் பாடியுள்ளனர். அண்மையில் நடந்த Thug Life இசை வெளியீட்டு விழாவில் முத்த மழை (தமிழ்) பாடலை, மேடையில் சின்மயி பாடியதற்கு மிகுந்த வரவேற்பு கிடைத்தது. தமிழிலும் சின்மயியை பாட வைத்திருக்கலாம் என சமூக வலைதளங்களில் கோரிக்கைகளை எழுந்தன.
இந்நிலையில் நேர்காணல் ஒன்றில் பங்கேற்ற சின்மயி, "இசை வெளியீட்டு விழா அன்று Dhee இல்லாததால் அப்பாடலை நான் பாடினேன். என்னையும் என்னுடைய 18, 20 வயதுகளில் முத்த மழை பாடலை இவ்வாறு பாடி இருக்க முடியாது. அனுபவத்தினாலேயே எனக்கும் இது வந்துள்ளது. பாடகி Dhee தனி குரல் வளம் மிக்கவர். அவர் மிகவும் சின்னபெண். அவர் குரலை என் குரலோடு ஒப்பிட்டு பேசுவது தேவையில்லாதது. இன்னும் 15 வருடங்களில் Dhee, 100 சின்மயிக்களையும் 100 ஷ்ரேயா கோஷலையும் விழுங்கிவிட்டு, தனக்கென தனி இடத்தை உருவாக்குவார். எங்களுக்குள் எந்தப் போட்டியும் இல்லை. எங்களை ஒப்பிடாதீர்கள். Dhee வெர்ஷன், சின்மயி வெர்ஷன் என்றெல்லாம் கூறுவது தேவையில்லாதது. சம்பந்தமே இல்லாமல் மல்யுத்தப் போட்டியில் எங்களை போட்டியிட சொல்வது போல இது உள்ளது. கலைஞர்களாக நாங்கள் ஒருவரையொருவர் போட்டியாளராக நினைப்பதில்லை. திறமைகளைக் கண்டு வியக்கவே செய்கிறோம். எங்கள் குரல்கள் ஒப்பீடு செய்யப்பட்டதற்கு, நான் Dhee-யிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.