ஏர்போர்ட் ஊழியரை தள்ளிவிட்ட சிரஞ்சீவி.. சர்ச்சை வீடியோ வைரல்

chiranjeevi

சினிமா நட்சத்திரங்கள் ஏர்போர்ட் வரும்போது அவர்கள் உடன் பேச வேண்டும், செல்பி எடுத்துக்கொள்ள வேண்டும் என அதிகம் பேர் வருவார்கள்.அப்படி சமீபத்தில் ஒரு மாற்று திறனாளியை நடிகர் நாகார்ஜூனாவின் பாதுகாவலர் தள்ளிவிட்டது பெரிய சர்ச்சை ஆனது. அதன் பின் அவர் மன்னிப்பு கோரி இருந்தார். அந்த நபரையும் நேரில் சந்தித்து பேசி இருந்தார்.இந்நிலையில் தற்போது நடிகர் சிரஞ்சீவி இதே போன்ற ஒரு சர்ச்சையில் சிக்கி இருக்கிறார்.அவர் ஏர்போர்ட்டில் இருந்து வெளியில் வரும்போது ஊழியர் ஒருவர் செல்பி எடுக்க பின்னால் வந்திருக்கிறார். ஒருகட்டத்தில் கோபமான சிரஞ்சீவி அந்த நபரை தள்ளவிட்டு இருக்கிறார். அந்த  வீடியோ தற்போது வெளியாகி சர்ச்சையை கிளப்பியுள்ளது.
 

Share this story