5லட்சம் ரூபாய்க்கு விற்பனையான சினிமா டிக்கெட் -எந்த படத்துக்கு தெரியுமா ?

balakrishna 23
ஒரு படத்தின் சினிமா டிக்கெட் ஐந்து லட்சத்துக்கு ஏலம் போனது .அது எந்த படம் என்பது பற்றி நாம் இப்பதிவில் காணலாம் 
தன் பட விழாவில் நடிகர் பாலகிருஷ்ணா தமிழில் நெகிழ்ச்சியுடன் பேசியதாவது: சென்னைக்கு வந்தது என் சொந்த வீட்டுக்கு வந்தது போன்ற மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது. காரணம், நான் பிறந்து வளர்ந்தது சென்னையில். தமிழ்நாடு என் ஜென்ம பூமி. தெலங்கானா என் கர்ம பூமி. ஆந்திரா என் ஆத்ம பூமி. என் தந்தையும், குருவும், தெய்வமுமான என்.டி.ஆரின் திரையுலக வாழ்க்கை இங்குதான் வளர்ந்தது. நடிக்க வந்து 50 வருடங்களாகி விட்டது. இப்போதும் நான் ஹீரோவாக நடிக்கிறேன். தெலுங்கில் எனது 4 படங்கள் தொடர்ந்து வெற்றிபெற்றுள்ளன. அனைவரும் என் படத்தை தியேட்டரில் பார்த்து ரசியுங்கள் என்றார். ரூ.5 லட்சத்துக்கு டிக்கெட் வாங்கிய ரசிகர்: அகண்டா 2 படத்தின் டிக்கெட் ஜெர்மனி நாட்டின் பிராங்க்பார்ட் நகரில் ஏலத்திற்கு விடப்பட்டன. இதில் முதல் ரசிகர் டிக்கெட்டை ஆயிரம் யூரோக்களுக்கு வாங்கியுள்ளார். இது இந்திய மதிப்பில் 5 லட்சத்து 5 ஆயிரம் ரூபாய் ஆகும். பாலையாவின் தீவிர ரசிகரான ராஜசேகர் பரணபள்ளி என்பவர் தான் இந்த டிக்கெட்டை வாங்கி இருக்கிறார்.

Share this story