தனுஷுக்கு ஜோடியாகும் பிரபல தெலுங்கு பட நாயகி…
தனுஷ் – பாலாஜி மோகன் கூட்டணியில் உருவாக இருக்கும் புதிய படத்தில் பிரபல தெலுங்கு பட நாயகி ஒப்பந்தமாகியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தெலுங்கில் மாபெரும் வெற்றிப்பெற்ற ‘உப்பென்னா’ படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் கீர்த்தி ஷெட்டி. முதல் படத்திலேயே அபார நடிப்பு திறமையை வெளிப்படுத்தி புகழ்பெற்றுவிட்டார். அறிமுக இயக்குனர் பிச்சிபாபு இயக்கிய இப்படத்தில் விஜய் சேதுபதி கொடூர வில்லனாக நடித்திருந்தார். குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம் 100கோடிக்கு மேல் வசூலை குவித்தது.
இந்த படத்திற்கு பிறகு வரிசையாக படங்களில் ஒப்பந்தமாகி வருகிறார் கீர்த்தி ஷெட்டி. உப்பென்னா படத்திற்கு பின் இயக்குனர் லிங்குசாமி- நடிகர் ராம் பொத்தினேனி கூட்டணியில் உருவாகும் படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகி வருகிறது. இதையடுத்து நடிகர் மகேஷ்பாபு நடிக்கும் புதிய படத்தில் நடிக்க இருக்கிறார்.
இந்நிலையில் ஏற்கனவே தனுஷ் நடிப்பில் வெளியான படம் மாரி 2. வடசென்னை ரவுடியாக தனுஷ் மிரட்டிய இப்படத்தை பாலாஜி மோகன் இயக்கியிருந்தார். இந்த படத்தில் சாய் பல்லவி, ரோபோ சங்கர் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இந்த படம் பெரிய வெற்றியை பெறவில்லை என்றாலும், இதில் இடம்பெற்ற ‘ரவுடி பேபி’ பாடல் பெரிய ஹிட்டடித்தது. தற்போது இந்த படத்தின் இயக்குனர் பாலாஜி மோகன் நடிகர் தனுஷுடன் மீண்டும் இணைந்துள்ளார். முதற்கட்ட பணிகள் நடைபெற்று வரும் இந்த படத்தின் ஹீரோயின் தேர்வு நடைபெற்று வந்ததது. இதில் நடிகை கீர்த்தி ஷெட்டி ஒப்பந்தமாகியிருப்பதாக கூறப்படுகிறது. இதனால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
ஏற்கனவே தனுஷ், கார்த்திக் நரேன் படம், நானே வருவேன், ஆயிரத்தில் ஒருவன் 2, மித்ரன் ஜவஹர் இயக்கும் படம் என 4 படங்கள் கைவசம் வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.