இன்னும் 5 நாட்களில் ஓடிடியில் வெளியாகும் தனுஷின் கர..!

Q

தனுஷ், மமிதா பைஜு, கே.எஸ்.ரவிக்குமார், ஜெயராம், கருணாஸ், சுராஜ் வெஞ்சரமூடு உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவான படம் கர. ஜி.வி.பிரகாஷ் இசையமைத்த இந்த படம் கடந்த ஏப்ரல் 30ம் தேதி திரைக்கு வந்து ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது. 

இந்த படத்தை வருகிற மே 28ம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என 5 மொழிகளில் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியிட திட்டமிட்டிருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.

திருட்டு தொழிலை கைவிட்டு நேர்மையாக வாழ நினைக்கும் தனுஷ், வங்கியின் ஜப்தி நடவடிக்கை காரணமாக அந்த வங்கியிலேயே கொள்ளை அடிக்க திட்டமிடும் ஒரு கதையில் இந்த படம் உருவாகியுள்ளது. 

Share this story