இணையத்தில் வெளியானது "குபேரா"- படக்குழு அதிர்ச்சி

இணையத்தில் வெளியானது "குபேரா" நடிகர் தனுஷ் நடிப்பில் நேற்று வெளியான "குபேரா" திரைப்படம் இணையத்தில் வெளியானது.
நடிகர் தனுஷ் பிச்சைக்காரனாக நடித்திருக்கும் படம் குபேரா. தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் வெளியாகியிருக்கும் குபேரா படத்தை சேகர் கம்முலா இயக்கியிருக்கிறார். டோலிவுட் இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘குபேரா’ படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நாகார்ஜுனாவும் நடித்துள்ளார். மேலும் இப்படத்தில் தனுஷுடன் ராஷ்மிகா மந்தனா, தலிப் தாஹில், ஜிம் சார்ப் உள்ளிட்டோர் இப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். தேவி ஸ்ரீ பிரசாத் இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார்.
சுமார் ரூ.200 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ளதாக கூறப்படும் குபேரா திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது. இந்நிலையில் தனுஷின் "குபேரா" திரைப்படம் இன்று இணையத்தில் வெளியானதால் படக்குழு அதிர்ச்சியடைந்துள்ளனர். திரையுலகினருக்கு தலைவலியாக மாறியுள்ள “பைரசி“ பிரச்சினைக்கு தீர்வுக்காண வேண்டும் என்பதே திரையுலகினரின் கோரிக்கையகா உள்ளது.