“கேம் சேஞ்சர்- இன்னும் நல்லா பன்னிருக்கலாம். படத்த பார்த்து எனக்கு திருப்தி இல்ல”: ஷங்கர்

கேம் சேஞ்சர் ஷங்கர்

கேம் சேஞ்சர் படத்தில் தனக்கு முழு திருப்தி ஏற்படவில்லை என இயக்குநர் ஷங்கர் கூறியுள்ளார்.

ராம் சரண் நடிப்பில் உருவான திரைப்படம் தான் கேம் சேஞ்சர். இந்த படத்தினை இயக்குனர் சங்கர் இயக்கியிருக்கிறார். ஸ்ரீ வெங்கடேஸ்வரா க்ரியேஷன்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க தமன் இதற்கு இசை அமைத்துள்ளார். திருநாவுக்கரசு இதன் ஒளிப்பதிவு பணிகளை கவனித்துள்ளர். இந்த படத்தில் ராம் சரணுடன் இணைந்து கியாரா அத்வானி, எஸ் ஜே சூர்யா, அஞ்சலி, சுனில், ஸ்ரீகாந்த் ஆகியோரும் நடித்திருக்கின்றனர். இந்த படத்தில் ராம் சரண் அப்பா – மகன் என இரட்டை வேடங்களில் நடித்துள்ளனர். அதே சமயம் அப்பா ராம் சரணுக்கு ஜோடியாக அஞ்சலியும் மகன் ராம்சரனுக்கு ஜோடியாக கியாரா அத்வானியும் நடித்திருக்கிறார். இப்படம் கடந்த 10 ஆம் தேதி வெளியான நிலையில், ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாத இப்படம் வசூல் ரீதியாக மட்டுமட்டுமின்றி, விமர்சன ரீதியாகவும் ஏமாற்றத்தையே கொடுத்தது.


இந்நிலையில் கேம் சேஞ்சர் படம் குறித்து நேர்காணல் ஒன்றில் கூறியுள்ள இயக்குநர் ஷங்கர், “கேம் சேஞ்சர் படத்தின் இறுதி ஆவுட்புட்டில் எனக்கு பெரிய திருப்தி இல்லை. நேரத்திற்காக நிறைய காட்சிகளை படத்தில் இருந்து நீக்க வேண்டியதாகிவிட்டது. நான் 5 மணி நேரத்திற்கு ஃபுட்டேஜ் எடுத்து வைத்திருந்தேன். கதையோடு சேர்ந்து இருந்த பல நல்ல காட்சிகளை நிக்கினோம். படம் எடுப்பது என்பது சிலை செதுக்குவது போலதான். மார்பிள் என்பதால் அதை செதுக்காமல் அப்படியே வைத்திருக்க முடியுமா?” என அதிருப்தியுடன் கூறியுள்ளார்.

Share this story