பிலிம்பேர் விருதுகளை தட்டி தூக்கிய படங்களின் முழு லிஸ்ட் இதோ..!

Film fare

69வது SOBHA Filmfare Awards South 2024 நேற்று இரவு ஹைதராபாத்தில் உள்ள JRC கன்வென்ஷன் சென்டரில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி, ஒவ்வொரு ஆண்டும் தெலுங்கு, தமிழ், மலையாளம் மற்றும் கன்னட சினிமாவில் சிறந்த நடிகர்கள், இசையமைப்பாளர்கள், இயக்குனர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களை அங்கீகரித்து அவர்களுக்கு விருது கொடுக்கப்படும். அந்த வகையில் இந்த ஆண்டும் திரைத்துறையில் வளர்ந்து சாதனை படைத்தவர்களுக்கு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.
அந்த வகையில், தமிழில் 

சிறந்த படமாக சித்தா, சிறந்த இயக்குனராக சித்தா பட இயக்குனர் எஸ் யு அருண் குமார்,  சிறந்த திரைப்படம் CRITICS விடுதலை Part 1 (வெற்றி மாறன்), சிறந்த நடிகர் விக்ரம் பொன்னியின் செல்வன் 2,  சிறந்த நடிகர் CRITICS  சித்தார்த் (சித்தா) , சிறந்த நடிகை நிமிஷா சஜயன் சித்தா, சிறந்த நடிகை CRITICS ஐஸ்வர்யா ராஜேஷ் ஃபர்ஹாணா, சிறந்த துணை நடிகர்: ஃபஹத் பாசில் மாமன்னன், சிறந்த துணை நடிகை அஞ்சலி நாயர் (சித்தா) ஆகியோர் பெற்றனர்.

Tamil

தெலுங்கு பிலிம்பேர் விருது: சிறந்த படம்: பாலகம் சிறந்த இயக்குனர்: வேணு எலிதாண்டி பாலகம் சிறந்த நடிகர்: நானி தசரா சிறந்த நடிகை: கீர்த்தி சுரேஷ் தசரா ஆகியோர் பெற்றனர் அவர்களுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

telugu

கன்னட பிலிம் பேர் விருது: சிறந்த படம்: டேர்டெவில் முஸ்தபா சிறந்த இயக்குனர்: ஹேமந்த் எம் ராவ் (சப்த சாகரதாச்சே எல்லோர்) சிறந்த நடிகர்: ரக்ஷித் ஷெட்டி (சப்த சாகரதாச்சே எல்லோர்) சிறந்த நடிகை: சிரி ரவிக்குமார் (சுவாதி முத்தின ஆண் ஹனியே)

Kannada
மலையாளம் பிலிம் பேர் விருது: சிறந்த படம்: 2018 சிறந்த இயக்குனர்: ஜூட் அந்தனி ஜோசப் (2018) சிறந்த நடிகர்: மம்முட்டி (நண்பகல் நேரத்து மயக்கம்)

Malayalam

சிறந்த நடிகர்: வின்சி அலோஷியஸ் (ரேகா) ஆகியோர பெற்றனர்., நேற்றிரவு வண்ணமயமாக நடந்த நிகழ்ச்சியில் அனைத்து பிரிவுகளிலும் பொன்னியின் செல்வன் திரைப்படம் பல விருதுகளை பெற்றது. சிறந்த நடிகருக்கான விருது விக்ரம் பெற்ற நிலையில் பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Share this story