“உங்க விடுதலையை எவனாலும் தடுக்க முடியாது”- Freedom படத்தின் டீசர் மாஸ்

சத்யசிவா இயக்கத்தில் சசிகுமார், லிஜோமோல் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள் Freedom திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.
சசிகுமார் மற்றும் சிம்ரன் நடிப்பில் அண்மையில் டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.அடுத்ததாக சசிகுமார் `ஃப்ரீடம்' என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் நடிகை லிஜோமோல் ஜோஸ் கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படத்தை சத்யசிவா இயக்கியுள்ளார். படத்தின் கிளிம்ப்ஸ் காட்சிகள் சில மாதங்களுக்கு முன் வெளியாகி மக்களின் கவனத்தை பெற்றது. தவறே செய்யாமல் இலங்கை அகதிகளாக சிறைச்சாலையில் சிக்கிக்கொண்ட இருவர் தப்பித்து செல்வதுப் போன்ற கதைக்களத்தில் இப்படம் அமைந்துள்ளது. படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.
இந்நிலையில் சத்யசிவா இயக்கத்தில் சசிகுமார், லிஜோமோல் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள் Freedom திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. இத்திரைப்படம் வரும் ஜூலை 10 ஆம் தேதி வெளியாகிறது.