ஜார்ஜியாவில் ஷூட்டிங்கை முடித்து சென்னை புறப்பட்ட விஜய்… புதிய அப்டேட்…

ஜார்ஜியாவில் ஷூட்டிங்கை முடித்து சென்னை புறப்பட்ட விஜய்… புதிய அப்டேட்…

ஜார்ஜியாவிலிருந்து ஷூட்டிங்கை முடித்து சென்னை புறப்பட்டார் நடிகர் விஜய்.

நடிகர் விஜய்யின் 65வது படம் கிடுகிடுனு உருவாகி வருகிறது. நெல்சன் இயக்கும் இந்த படத்திற்கு ரசிகர்களிடையே பலத்த எதிர்பார்ப்பு உள்ளது. விஜய் ரா ஏஜென்ட்டாக நடிப்பதால் கூடுதல் சிறப்பாக கருதப்படும் நிலையில் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் பெரிய பட்ஜெட்டில் தயாரிக்கிறது. விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிப்பது படத்தின் மீதான ஆர்வத்தை தூண்டி வருகிறது.

ஜார்ஜியாவில் ஷூட்டிங்கை முடித்து சென்னை புறப்பட்ட விஜய்… புதிய அப்டேட்…

இவர்களுடன் யோகிபாபு, அபர்ணா தாஸ், விடிவி கணேஷ் உள்ளிட்டோரும் நடிக்க உள்ளனர். இந்த படத்தின் முதற்கட்ட ஷூட்டிங் கடந்த 9ம் தேதி ஜார்ஜியாவில் தொடங்கியது. இதற்காக விஜய், நெல்சன், பூஜா ஹெக்டே உள்ளிட்ட படக்குழுவினர் ஜார்ஜியாவுக்கு புறப்பட்டு சென்றனர். இந்த ஷூட்டிங்கில் சுமார் 100 பேர் வரை கலந்துக்கொண்டு பணியாற்றி வந்தனர்.

ஜார்ஜியாவில் ஷூட்டிங்கை முடித்து சென்னை புறப்பட்ட விஜய்… புதிய அப்டேட்…

இந்த ஷூட்டிங்கில் ஒரு பிரம்மாண்ட சண்டைக்காட்சி ஒன்று படமாக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து விஜய் மற்றும் பூஜா ஹெக்டேவின் ரொமான்டிக் பாடல் ஒன்றும் படமாக்கிவிட்டனர். 16 நாட்கள் விறுவிறுப்பாக நடந்த ஷூட்டிங் நேற்றுடன் முடிவுற்றதது. இதைத்தொடர்ந்து விஜய் மற்றும் படக்குழுவினர் சென்னை புறப்பட்டு விட்டனர். விஜய் ஜார்ஜியாவிலிருந்து சென்னை புறப்பட்ட விமான நிலையம் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.

Share this story