கார் விபத்தில் சிக்கிய குட் பேட் அக்லி நடிகர்- தந்தை பலி

கார் விபத்தில் சிக்கிய குட் பேட் அக்லி நடிகர்- தந்தை பலி

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த பாறையூரில் மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோவின் குடும்பம் விபத்தில் சிக்கியது. அவரின் தந்தை சி.பி.சாக்கோ சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.


தருமபுரி அருகே விபத்தில் சிக்கிய கேரள நடிகர் தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த பாறையூரில் லாரி மீது கார் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் கேரளா நடிகர் ஷைன் டாம் சாக்கோவின் தந்தை சிபி சாக்கோ சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காயமடைந்த சைன் டாம்சாக்கோ, தாய் உள்ளிட்ட 4 பேருக்கு தருமபுரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். திருச்சூரில் இருந்து பெங்களூருக்கு மருத்துவ பரிசோதனைக்காக சென்ற போது விபத்து நேர்ந்தது.

Share this story