நான்தான் மற்றவர்களுக்கு மன உளைச்சலை கொடுப்பேன்: திரிஷா..!

திரிஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியிருக்கிறது. அதாவது சாமியார் தோற்றத்தில் கடற்கரையில் இருக்கும் ஒருவரிடம் பெண் ஒருவர் நீங்கள் மன உளைச்சலாக இருக்கும்போது என்ன செய்வீர்கள் என்று கேட்பது போன்றும்; அதற்கு அந்த மனிதர், ‘நான்தான் மற்றவர்களுக்கு மன உளைச்சலை கொடுப்பேன். சமநிலை முக்கியம்” என கூறுவது போன்ற ஒரு ரிலீஸ் சமூக வலைதளங்களில் ட்ரெண்டானது. அந்த ரீல்ஸைத்தான் திரிஷா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியாக வைத்திருக்கிறார்.
முன்னதாக விஜய்யின் பிறந்தநாளுக்கு அவருடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து திரிஷா வாழ்த்து தெரிவித்திருந்தார். அது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது. இப்போது அதனையும், இந்த ரீல்ஸையும் இணைத்து ரசிகர்கள் கமெண்ட்ஸ் செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள்.