புதுச்சேரியில் இன்று இளையராஜா இசை கச்சேரி!

புதுச்சேரி சூரியன் எப் எம் சார்பில் இன்று மாலை உப்பளம் மைதானத்தில் இளையராஜா இசை நிகழ்ச்சி நடக்கிறது. இதில் பங்கேற்க துச்சேரி வந்துள்ள இளையராஜா, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது பேசிய அவர், “புதுச்சேரி ரசிகர் பெருமக்களே நான் இன்று காலை புதுச்சேரி வந்து விட்டேன். மாலையில் நடக்க இருக்கின்ற இசை நிகழ்ச்சிக்கு எனது குழுவினருடன், பாடகர்கள், பாடகிகளுடன் வந்திருக்கிறேன். இசை நிகழ்ச்சி மாலையில் நடக்க இருக்கிறது. அனைவரும் வருவீர்கள் என்பது எனக்கு நன்றாக தெரியும். முதல் முறையாக இசை நிகழ்ச்சி நடத்துவதற்காக நான் இங்கு வந்திருக்கிறேன். நான் வந்து விட்டேன் என்பதை அறிவிப்பதற்காக தான் உங்களுடன் பேசிக் கொண்டிருக்கிறேன். நான் வந்து விட்டேன் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.
முன்னதாக சூரியன் எப்எம் சார்பில் தனியார் ஹோட்டலில் இளையராஜாவுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது சூரியன் எப்எம் விளம்பரதாரர்கள், முக்கியஸ்தர்கள் இளையாராஜாவுடன் புகைப்படம் மற்றும் குழு புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.