ஹெல்மெட் அணியாமல் பைக் ஓட்டிய யூடியூபர் இர்ஃபானுக்கு ரூ.1,500 அபராதம்
பிரபல யூடியூபரான இர்பான் 'இர்பான் வியூஸ்' எனும் யூடியூப் சேனலை நடத்தி வருகிறார். உணவகங்களில் உள்ள உணவுகளை ரிவியூ செய்வதன் மூலம் பிரபலமான இவர் திரைப்பிரபலங்களுடன் உணவருந்தியவாரே நேர்காணல்களும் எடுத்து வருகிறார். பிரபல யூடியூபர் இர்பான் அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். அண்மையில் ஹெல்மெட் அணியாமல் பிரபல யூடியூபர் இர்பான் பைக் ஓட்டிய வீடியோ சமுக வலைத்தளங்களில் வைரலானது.அந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள், "நடிகர் பிரஷாந்த் விட சக்தி வாய்ந்த youtuber இர்பான் தான். இதுவே TTF வாசனா இருந்தா உடனடி கைது தான்" என்று விமர்சித்தனர்.இதனையடுத்து, ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டியது முறையான நம்பர் ப்ளேட் இல்லாதது உள்ளிட்டவைக்காக யூடியூபர் இர்ஃபானுக்கு ரூ.1,500 அபராதம் விதித்து சென்னை போக்குவரத்து காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது
நடிகர் பிரஷாந்த் விட சக்தி வாய்ந்த youtuber இர்பான்!
— Hemand Kumar Say no to drugs and DMK (@LDH_ADMK_VLR) August 1, 2024
இதுவே TTF வாசனா இருந்தா உடனடி கைது தான்.#TTFVasan #IrfansView pic.twitter.com/B2N1mpZjtn
நடிகர் பிரஷாந்த் விட சக்தி வாய்ந்த youtuber இர்பான்!
— Hemand Kumar Say no to drugs and DMK (@LDH_ADMK_VLR) August 1, 2024
இதுவே TTF வாசனா இருந்தா உடனடி கைது தான்.#TTFVasan #IrfansView pic.twitter.com/B2N1mpZjtn
இந்தநிலையில் சமீபத்தில் ஒரு யூ-டியூப் சேனலுக்கு, நடிகர் பிரசாந்த் பேட்டியளித்தார். 'யூ-டியூப்'பை சேர்ந்த இளம்பெண் பின்னால் அமர, பிரசாந்த் தனது மோட்டார் சைக்கிளில் சென்னை தியாகராயநகர் சவுத் போக் சாலையை சுற்றி சுற்றி வந்து பேட்டியளித்தார். இந்த பேட்டி, சம்பந்தப்பட்ட யூ-டியூப்பில் வெளியாகி வைரலானது.இதனையடுத்து போக்குவரத்து போலீசார் நடிகர் பிரசாந்துக்கு ரூ.1,000, உடன் சென்ற பெண்ணுக்கு ரூ.1,000 என மொத்தம் ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்தனர்.