இப்படி ஒரு படமா ? ரிலீஸ் ஆகும்போதே 2 வெவ்வேறு கிளைமாக்ஸ் உடன் ரிலீஸ் ஆகும் படம்

ஹவுஸ்ஃபுல் 5 ஒரு மல்டி-ஸ்டார் படம். இதில் சுமார் 24 நட்சத்திரங்கள் நடிக்கின்றனர். படத்தில் அக்ஷய் குமார், ரிதேஷ் தேஷ்முக், அபிஷேக் பச்சன் ஆகியோருடன் நர்கிஸ் ஃபக்ரி, சோனம் பஜ்வா, ஜாக்குலின் ஃபெர்னாண்டஸ், சஞ்சய் தத், நாணா படேகர், ஃபர்தீன் கான், ஷ்ரேயாஸ் தல்படே, டினோ மோரியா, ஜானி லெவர், சித்ராங்கதா சிங், சங்கி பாண்டே, சௌந்தர்யா சர்மா மற்றும் நிக்கிதின் தீர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
375 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ள இந்தப் படம் ஜூன் 6 ஆம் தேதி வெளியாகிறது. படத்தின் முழு படப்பிடிப்பும் ஒரு கப்பலில் நடந்தது, சுமார் 40 நாட்களில் இப்படத்தை எடுத்துள்ளனர்.
இந்நிலையில், இப்படத்தை பற்றிய ஒரு சுவாரஸ்ய தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி இப்படம் ஹவுஸ்ஃபுல் 5A மற்றும் ஹவுஸ்ஃபுல் 5B என இரண்டு வெர்ஷனாக வெளியாக உள்ளதாம். இந்த இரண்டு வெர்ஷனும் வெவ்வேறு கிளைமாக்ஸ் உடன் கூடியதாம். இந்த இரண்டு வெர்ஷனுமே ஒரே நாளில் தான் ரிலீஸ் ஆக உள்ளது. ஒரே நாளில் இரண்டு கிளைமாக்ஸ் உடன் ரிலீஸ் ஆகும் முதல் படம் இதுதான். இதற்கு முன்னர் படம் சரியாக போகவில்லை என்றால் கிளைமாக்ஸை மாற்றுவார்கள். ஆனால் ரிலீஸ் ஆகும்போதே இரண்டு கிளைமாக்ஸ் உடன் ரிலீஸ் ஆகும் படம் இதுதான்.
ஹவுஸ்ஃபுல் 5 படத்தின் முன்பதிவு தொடங்கியுள்ளது. படத்தின் டிக்கெட் விற்பனையும் வேகமாக நடைபெற்று வருகிறது. முன்பதிவு தொடங்கிய சில மணிநேரங்களில் படம் 2 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூலித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இது முந்தைய நான்கு பாகங்களிலிருந்தும் வேறுபட்டதாக இருக்கும் என கூறப்படுகிறது.தற்போது வரை ஹவுஸ்ஃபுல் 5 திரைப்படத்திற்கு முன்பதிவு மூலம் 11714 டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்துள்ளன. இப்படத்துக்கு போட்டியாக கமல்ஹாசனின் தக் லைஃப் படமும் இந்தியில் ரிலீஸ் ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது.