ரூ.350 கோடி பட்ஜெட்டில் ஜூனியர் என்டிஆர் படம்...!
1724325150154
‘ஆர்ஆர்ஆர்’ படத்தைத் தொடர்ந்து ‘தேவாரா’ படத்தில் நடித்து வருகிறார் ஜூனியர் என்டிஆர். கொரட்டலா சிவா இயக்கும் இந்தப் படத்தில் ஜான்வி கபூர் நாயகியாகவும் சைஃப் அலிகான் வில்லனாகவும் நடிக்கின்றனர். இந்த படம் 2 பாகங்களாக வெளியாக இருக்கிறது.
இதையடுத்து பிரசாந்த் நீல் இயக்கும் படத்தில் நடிக்கிறார் ஜூனியர் என்.டி.ஆர். மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் இதன் தொடக்க விழா சமீபத்தில் நடந்தது. புவன் கவுடா ஒளிப்பதிவு செய்கிறார். ரவி பஸ்ரூர் இசையமைக்கிறார். தெலுங்கு, தமிழ், இந்தி உட்பட 5 மொழிகளில் வெளியாக இருக்கும் இந்தப் படம் ரூ.350 கோடி பட்ஜெட்டில் உருவாக இருப்பதாகக் கூறப்படுகிறது.