கமல் மகள் நடிகை அக்ஷரா ஹாசன் பரபரப்பு அறிக்கை..!

நடிகர் கமல்ஹாசன் நடித்துள்ள தக் லைஃப் திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. எதிர்பார்த்த அளவுக்கு படம் இல்லை என்றும் இயக்குநர் மணிரத்னம் கமல்ஹாசன், சிம்புவின் உழைப்பை ரொம்பவே வீணடித்து விட்டார் என்றும் கூறுகின்றனர். இந்நிலையில், இன்னொரு பிரச்னையை அக்ஷரா ஹாசன் அட்ரெஸ் செய்துள்ளார். அக்ஷ்ரா ஹாசன் பெயரை பயன்படுத்தி முறைகேடு நடப்பதாகவும் தனது ரசிகர்கள் மற்றும் சினிமா நண்பர்கள் அலர்ட்டாக இருக்க வேண்டி ஒரு போஸ்ட் ஒன்றை பதிவிட்டுள்ளார்.
சில ஆண்டுகளாக சினிமாவில் இருந்து ஒதுங்கி இருக்கும் அக்ஷரா ஹாசன், புதிதாக ஊட்டியில் அலுவலகம் அமைத்து தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியதாக இப்ராஹிம் அக்தர் என்பவர் தனது பெயரையும் தனது குடும்பத்தின் பெயரையும் பயன்படுத்தி பொய்யான செய்தியை பரப்பி வருகிறார். இதற்கும் எனக்கும் சம்மந்தமில்லை. என்னுடைய நண்பர்கள் மற்றும் சினிமா உலகினர் யாரும் இந்த பொறியில் சிக்கிவிட வேண்டாம் என எச்சரிக்கை போஸ்ட் ஒன்றை பதிவிட்டுள்ளார்.
அக்ஷரா ஹாசன் பெயரில் போலியாக தயாரிப்பு நிறுவனம் தொடங்கப்பட்டு இருப்பதாக அவரே பதிவிட்டு எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், அக்ஷரா ஹாசன் ஏதோ பெரிய பிரச்னையில் சிக்கியுள்ளாரா என்கிற கேள்வி எழுந்துள்ளது. அப்பா கமல்ஹாசனிடம் சொன்னால், அவரே இந்த சிக்கலை தீர்த்து வைப்பாரே என்றும் ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர். 33 வயதாகும் அக்ஷரா ஹாசன் இன்னமும் திருமணம் செய்துக் கொள்ளவில்லை. காதல், பிரேக்கப் என அவர் குறித்து எந்தவொரு கிசுகிசுக்களும் இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.