சில கோடிகளை சம்பாதிக்க வேண்டுமென்றால் கமல்ஹாசன் மன்னிப்பு கேட்க வேண்டும்- நீதிபதி

கர்நாடகாவில் ‘தக் லைப்’ படத்திற்கு தடையை விலக்கக்கோரிய மனு மீதான விசாரணையில் அம்மாநில உயர் நீதிமன்றம் காட்டமான விமர்சனத்தை வைத்துள்ளது.
இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் 'தக் லைப்' என்ற திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் கமல் பேசும்போது கன்னட மொழி குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதற்கு பல கன்னட நடிகர்கள் மற்றும் கன்னட அரசியல் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து கமலஹாசன் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறி வருகின்றனர். ஆனால் கமல் அதற்கு ஒத்து கொள்ள வில்லை. வரும் 5 ம் தேதி இந்த படம் ரிலீஸ் ஆக உள்ளது
இந்நிலையில் கர்நாடகாவில் இருந்து சில கோடிகளை சம்பாதிக்க வேண்டும் என்றால் கமல் மன்னிப்பு கேட்க வேண்டும் என நீதிபதி நாக பிரசன்னா கருத்து கூறியுள்ளார். கமல் பேச்சால் சமூகத்தில் அமைதியின்மை ஏற்பட்டுள்ளது, பதற்றம் ஏற்பட்டுள்ளது எனக்கூறிய நீதிபதி, தமிழில் இருந்து கன்னடம் பிறந்தது என எந்த அடிப்படையில் பேசினீர்கள்? கமல்ஹாசன் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும், கமல்ஹாசன் மன்னிப்பு கேட்டால் அனைத்து பிரச்சனைகளும் முடிந்து விடும் எனக் கூறினார். மேலும் கமல்ஹாசனாக இருந்தாலும், யாராக இருந்தாலும் மக்களின் உணர்வுகளை புண்படுத்தக்கூடாது என்றும் நீதிபதி எச்சரிக்கை விடுத்தார்.
-