"கன்னட மொழி குறித்து நான் பேசியது தவறாக புரிந்து கொள்ளப்பட்டது"- கமல்ஹாசன் கடிதம்

கன்னட மொழி குறித்து நான் பேசியது தவறாக புரிந்து கொள்ளப்பட்டது என கர்நாடக திரைப்பட சம்மேளன தலைவருக்கு நடிகர் கமல்ஹாசன் கடிதம் எழுதியுள்ளார்.
இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் 'தக் லைப்' என்ற திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் கமல் பேசும்போது கன்னட மொழி குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதற்கு பல கன்னட நடிகர்கள் மற்றும் கன்னட அரசியல் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து கமலஹாசன் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறி வருகின்றனர். ஆனால் கமல் அதற்கு ஒத்து கொள்ள வில்லை. வரும் 5 ம் தேதி இந்த படம் ரிலீஸ் ஆக உள்ளது
இந்நிலையில் கன்னட மொழி குறித்து நான் பேசியது தவறாக புரிந்து கொள்ளப்பட்டது, வேதனை அளிக்கிறது என கர்நாடக திரைப்பட சங்கத் தலைவருக்கு கமல்ஹாசன் கடிதம் எழுதியுள்ளார். அதில், “நாம் அனைவரும் ஒன்று, ஒரே குடும்பம் என்பதை என் கருத்தின் மூலம் வெளிப்படுத்த நினைத்தேனே கன்னட மொழியையோ, மக்களையோ இழிவுப்படுத்தும் நோக்கத்தில் அல்ல. சிவராஜ்குமார் மீது உண்மையான பாசத்துடன் கூறியது தவறாக புரிந்து கொள்ளப்பட்டது. சிவராஜ்குமார் அவமானங்களை சந்திக்க நேர்ந்தது எனக்கு வருத்தமாக இருக்கிறது. எங்கள் உண்மையான அன்பும், மரியாதையும் எப்போதும் நிலைத்து உறுதியாக இருக்கும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.