ஆகஸ்ட் 30 முதல் 'கனா காணும் காலங்கள்' சீசன் 3
பிரபல தனியார் தொலைக்காட்சியில் வெளியான 'கனா காணும் காலங்கள்', பள்ளி மாணவர்களின் கவலையற்ற வாழ்க்கை கொண்டாட்டங்களை கண்முன் கொண்டு வந்தது என்று கூறலாம். கனா காணும் காலங்கள் தொடரின் முதல் இரண்டு சீசன்களின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து, இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், தற்போது 'கனா காணும் காலங்கள்' தொடரின் அடுத்த சீசனை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
வெப் சீரியஸின் முதல் சீசனுக்கு அபரிமிதமான வரவேற்பு கிடைத்த நிலையிலும், அடுத்தடுத்த எபிசோடுகளுக்காக ரசிகர்களிடமிருந்து பெருமளவிலான கோரிக்கைகள் குவிந்தது. இதனையடுத்து கடந்தாண்டு இதன் இரண்டாவது சீசன் ஒளிபரப்பானது. இரண்டாம் சீசனுக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து, தற்போது டிஸ்னி+ ஹாட்ஸ்டார் நிறுவனம், பள்ளி மாணவர்களை மையமாக வைத்து உருவாகும், 'கனா காணும் காலங்கள்' தொடரின் மூன்றாவது சீசனை வெளியிட உள்ளது. அந்த வகையில், பெப்பி பாடல் மூலம் ஸ்ட்ரீம் ஆகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. கென் ராய்சன் இயக்கிய இந்தப் பாடலை, ஆனந்த் அரவிந்தாக்ஷன் மற்றும் ரக்ஷிதா சுரேஷ் பாடியுள்ளனர். இந்நிலையில், "கனா காணும் காலங்கள்" சீரிஸின் மூன்றாவது சீசன், ஆகஸ்ட் 30 ஆம் தேதி முதல் வெளியாகவுள்ளது.