'தக் லைஃப்' படம்... ரூ.30 கோடி நஷ்டம்- தயாரிப்பு நிறுவனம் வேதனை

கர்நாடகாவில் ’தக் லைஃப்’வெளியாகாததால் ரூ.30 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக படம் தயாரிப்பு நிறுவனம் வேதனை தெரிவித்துள்ளது.
மணிரத்னம் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடித்துள்ள தக் லைஃப் திரைப்படம் கடந்த 5ம் தேதி தமிழ் நாட்டில் ரிலீஸ் ஆனது. கர்நாடகாவில் மட்டும் ரிலீஸ் ஆகவில்லை. கமல்ஹாசன் இந்த படத்தில் ஆடியோ ரிலீஸ் விழாவில் கன்னட மொழி குறித்து தெரிவித்த கருத்துக்களே இதற்கு காரணம். இந்த பேச்சுக்கு கன்னட மொழி பேசுவோர் கடும் எதிர்ப்பு தெரிவித்து இப்படத்தை கர்நாடகவில் ரிலீஸ் செய்ய விடமாட்டோம் என்று கூறினர். கோர்ட்டில் கமல் வழக்கு தொடுத்த போது கமல் மன்னிப்பு கேட்க சொல்லி கோர்ட் கூறியது. ஆனால் கமல் மன்னிப்பு கேட்கவில்லை. இதனால் இப்படத்தை மீறி கர்நாடகவில் ரிலீஸ் செய்தால் தியேட்டரை கொளுத்துவோம் என்று சில கன்னட அமைப்புகள் மிரட்டியது. இதனை எதிர்த்து கர்நாடகத்தை சேர்ந்த மகேஸ்ரெட்டி என்பவர் சுப்ரீம் கோா்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் கர்நாடகாவில் இப்படத்தை ரிலீஸ் செய்ய அனுமதியளித்துள்ளது.
தக் லைஃப் படத்திற்கு கர்காடகாவில் தடை விதிக்கப்பட்டதற்கு எதிரான வழக்கு விசாரணையின்போது, கர்நாடகாவில் தக் லைஃப் படம் கர்நாடகாவில் வெளியாகாததால் ரூ.30 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் கூறியது. இதனை கேட்ட உச்சநீதிமன்றம், ஒரு நகைச்சுவை நடிகர் ஏதாவது கூறினால் கூட உணர்வுகள் புண்படுகின்றன எனக்கூறி நாசவேலைகள் நடக்கின்றன, நாம் எங்கே எதை நோக்கி சென்று கொண்டிருக்கிறோம்? நாளை இதே போன்று ஒரு நாடகத்துக்கு எதிராகவோ, கவிதைக்கு எதிராகவோ கும்பல்கள் மிரட்டல் விடுக்கக்கூடும், இதனை அனுமதிக்க முடியாது. ‘தக் லைப்' திரைப்படம் வெளியிடுவதற்கு கர்நாடக அரசு முழு பாதுகாப்பை அளிக்க வேண்டும். வன்முறைகள் ஏற்பட்டால் அரசு அடக்க வேண்டும், கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பாக படம் திரையிடுவதற்கு யாரேனும் தடையாக இருந்தால் அவர்கள் மீது கிரிமினல் மற்றும் சிவில் வழக்குகளை பதிவு செய்ய வேண்டும் என கருத்து தெரிவித்தது. தக் லைஃப் படம் கர்நாடகாவில் வெளியானால் உரிய பாதுகாப்பு அளிக்கப்படும் என்றும் அம்மாநில அரசு உறுதி அளித்தது.