"நான் ஈ படம் காப்பி“ - “லவ்லி“ படக்குழுவுக்கு நோட்டீஸ்

லவ்லி படக்குழுவுக்கு “நான் ஈ” தயாரிப்பாளர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
2012ஆம் ஆண்டில் வெளிவந்த திரைப்படம் “நான் ஈ”. தெலுங்கிலும் தமிழிலும் தயாரிக்கப்பட்ட இப்படம் மலையாளம், இந்தியில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியானது. இறந்தவர் தன்னைக் கொன்றவரை பழிவாங்குவதற்காக ஈயாக மறுபிறவி எடுப்பதே கதை. இந்நிலையில் லவ்லி படக்குழுவுக்கு “நான் ஈ” தயாரிப்பாளர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதில், படத்தில் பயன்படுத்தப்பட்ட 'ஈ'யின் உருவ அமைப்பு, 'நான் ஈ' படத்தில் பயன்படுத்தப்பட்டது. அதற்கு உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என கூறப்பட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இதுதொடர்பாக 'லவ்லி' இயக்குநர் தினேஷ் கூறுகையில், “நான் ஈ பட தயாரிப்பு தரப்பிலிருந்து இப்படி ஒரு நோட்டீஸ் வரும் என்று எதிர்பார்க்கவில்லை. லவ்லி நாயகி உன்னி மாயா பிரசாத்தின் முகத்தை அடிப்படையாக வைத்து தான் லவ்லி படத்தில் வரும் 'ஈ'யின் கதாபாத்திரம் உருவாக்கப்பட்டது” எனக் கூறியுள்ளார்.