கொஞ்சம் கூட மனிதநேயமே இல்லாதவர் அமலாபால் : ஒப்பனைக் கலைஞர் குற்றச்சாட்டு..!

1

பிரபல ஒப்பனைக் கலைஞராகப் பணியாற்றி வருபவர் ஹேமா. அண்மையில் இவர் அளித்த நேர்காணல் ஒன்றில் நடிகை அமலா பால் தன்னிடம் படப்பிடிப்புத் தளத்தில் நடந்துகொண்ட முறையைப் பற்றி பகிர்ந்துகொண்டார்.

அதில், தான் ஒருமுறை நடிகை அமலா பாலின் படப்பிடிப்புக்கு சென்றதாகவும் அப்போது வெயில் அதிகமாக இருந்ததால் அமலா பாலின் கேரவனுக்குள் தானும் வேறு சிலப் பெண்களும் அமர்ந்து கொண்டதாக திருவாட்டி ஹேமா கூறினார்.

ஆனால்,”சிறிது நேரத்திலேயே நடிகை அமலா பால் தனது மேலாளரை அழைத்து எங்களை வெளியேறும்படி கூறினார். நாங்கள் இறங்கும் வரை அவர் எங்களை விடவில்லை. அதனால் கேரவனை விட்டு இறங்கிவிட்டோம்,” என்றார் அந்த ஒப்பனைக் கலைஞர்.

“ நான் பல உச்ச நடிகைகளுக்கு ஒப்பனை செய்துள்ளேன். அவர்கள் அனைவரும் என்னிடம் மிகவும் கனிவாக நடந்து கொள்வார்கள். ஆனால், அமலா பால் கொஞ்சம் கூட மனிதநேயமே இல்லாமல் நடந்துகொண்டார்,” என மிக வேதனையோடு தெரிவித்தார்.

Share this story