லேடி சூப்பர்ஸ்டார் டைட்டில்.. எனக்கு அவமானமாக இருக்கு: பிரபல மலையாள நடிகை
கோலிவுட்டில் நடிகை நயன்தாராவை தான் லேடி சூப்பர்ஸ்டார் என ரசிகர்கள் அழைத்து வருகின்றனர். அந்த டைட்டிலை அவரும் ஏற்றுக்கொண்டார். ஆனால் அந்த டைட்டில் ஒரு பெரிய அவமானம் என பிரபல நடிகை ஒருவர் கூறி இருக்கிறார். நடிகை மஞ்சு வாரியர் தான் அப்படி கூறி இருக்கிறார். தமிழில் அசுரன், துணிவு போன்ற படங்களில் நடித்த அவர் அடுத்து வெற்றிமாறனின் விடுதலை 2, ரஜினியின் வேட்டையன் போன்ற படங்களில் நடித்து வருகிறார்.
மஞ்சு வாரியரை லேடி சூப்பர்ஸ்டார் என மலையாள மீடியாக்களில் குறிப்பிடுவது வழக்கம். அதை பற்றி பேசிய அவர் “என்னை லேடி சூப்பர்ஸ்டார் என சிலர் குறிப்பிடுகிறார்கள். அது தேவையில்லாத விவாதத்தை ஏற்படுத்துகிறது. எது எனக்கு அவமானத்தை தான் கொண்டு வருகிறது. அந்த பட்டம் எனக்கு வேண்டாம், என் ரசிகர்களின் அன்பு மட்டுமே போதும்" என மஞ்சு வாரியர் என கூறியுள்ளார்.