மூச்சு திணறல் காரணமாக மோகன்லால் மருத்துவமனையில் அனுமதி
1723975484459
மலையாள சினிமாவில் சூப்பர் ஸ்டாராக இருப்பவர் நடிகர் மோகன்லால். தமிழ் சினிமாவிலும் மலையாள சினிமாவிலும் பல திரைப்படங்கள் நடித்துள்ளார்.தற்பொழுது பிரித்விராஜ் இயக்கும் எம்புரான் திரைப்படத்திலும், பாரோஸ் மற்றும் எல்360 படங்களில் நடித்து வருகிறார்.இந்நிலையில் நடிகர் மோகன் லால் மூச்சு திணறல் பிரச்சனையால் கொச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு அதிகளவு காய்ச்சல் மற்றும் தசை வலி இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மோகன்லாலுக்கு வைரல் தொற்றும் ஏற்பட்டு இருக்கலாம் என மருத்துவர்கள் கூறியுள்ளனர். 5 நாட்களுக்கு பொது இடங்களுக்கு எங்கும் செல்ல வேண்டாம் எனவும் நன்றாக ஓய்வு எடுக்கும் படி மருத்துவர்கள் அறிவுரை கூறியுள்ளனர்.