சத்யராஜின் 'மை பெர்ஃபெக்ட் ஹஸ்பண்ட்' சீரிஸின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்...!

My perfect husband

முன்னணி நடிகர் சத்யராஜ் நடிப்பில் உருவாகியுள்ள 'மை பெர்ஃபெக்ட் ஹஸ்பண்ட்' சீரிஸின், ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. மிக வித்தியாசமான முறையில், மூன்று ஹீரோயின்களுடன் சத்யராஜ் இடம்பெற்றிருக்கும் 'மை பெர்ஃபெக்ட் ஹஸ்பண்ட்' சீரிஸின் ஃபர்ஸ்ட் லுக், ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைக் குவித்து வருகிறது.

My perfect husband

அனைத்து கமர்ஷியல் அம்சங்களுடன் கூடிய, பொழுதுபோக்கு படைப்பாக இந்த சீரிஸ் உருவாகியுள்ளது.தயாரிப்பாளர் முகமது ரசித் தயாரித்துள்ள இந்த சீரிஸினை, இயக்குநர் தாமிரா இயக்கியுள்ளார். இந்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் சீரிஸில் சத்யராஜுடன் நடிகைகள் சீதா, ரேகா ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர். இவர்களுடன் இந்த சீரிஸில், நடிகர்கள் வர்ஷா பொல்லம்மா, ரக்ஷன், லிவிங்ஸ்டன், ஆஜித் காலிக், கிருத்திகா மனோகர், ராகவி மற்றும் ரேஷ்மா பசுபால்டி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த வெப் சீரிஸுக்கு வித்யாசாகர் இசையமைத்துள்ளார்.

Sathyaraj

Share this story