சத்யராஜ் நடித்த காமெடி வெப் தொடரான `My Perfectt Husband' ட்ரைலர் ரிலீஸ்..
தமிழ் சினிமாவின் வெர்சடைல் நடிகர்களில் ஒருவர் சத்யராஜ். எந்த கதாப்பாத்திரம் கொடுத்தாலும் அதுக்கேற்றார் போல திறமையான நடிப்பை வெளிப்படுத்தும் நபர். இவர் நடிப்பில் கடந்த மாதம் வெளியானது வெப்பன் திரைப்படம். வெப்பன் திரைப்படத்தின் ஒரு சூப்பர் ஹுயுமன் கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தார். திரைப்படம் மக்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்றது. அண்மையில் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான மழை பிடிக்காத மனிதன் திரைப்படத்திலும் ஒரு மாறுப்பட்ட கெட்டப்பில் நடித்து இருந்தார். அடுத்ததாக சத்யராஜ் ஓடிடி சீரிஸ் ஆன `மை பெர்ஃபக்ட் ஹஸ்பண்ட்' என்ற தொடரில் நடித்துள்ளார்.
படத்தின் ஃபர்ஸ்ட் லுக் சில நாட்களுக்கு முன் வெளியானது. சத்யராஜுடன் சீதா, ரேகா மற்றும் ரேஷ்மா முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இத்தொடரில் வர்ஷா பொல்லமா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இத்தொடரை தமிரா இயக்கியுள்ளார். முகமத் ரசித் தயாரித்த இத்தொடரை வித்யாசாகர் இசையமைத்துள்ளார். இந்த சீரிஸ் வரும் ஆகஸ்ட் 16 ஆம் தேதி டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகவுள்ளது. சீரிஸின் டிரைலர் தற்பொழுது வெளியாகியுள்ளது. சத்யராஜ் மற்றும் சீதா அன்பான கணவன் மனைவியாக வாழ்ந்து வருகின்றனர். இவரின் மகன் காதலிக்கும் பெண் வர்ஷா பொல்லமா. அவளின் தாயான ரேகா , சத்ய ராஜின் முன்னால் காதலியாக இருக்கிறார். இது போன்ற காட்சிகள் டிரைலரின் இடம் பெற்றுள்ளது. இந்த சீரிஸ் காமெடி நிறைந்த பொழுது போக்கு தொடராக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.