விரைவில் நடிகர் சங்க கட்டிடம் திறப்பு..? முதல் நிகழ்ச்சியாக விஷால்- சாய் தன்ஷிகா திருமணம்?

நடிகர் சங்க கட்டடப் பணிகள் தற்போது இறுதி கட்டடத்தை எட்டியுள்ளதாக நடிகை சாய் தன்ஷிகா வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
நாசர் தலைமையிலான தென்னிந்திய நடிகர் சங்கம், கடந்த 2016ஆம் ஆண்டு முதல் நடிகர் சங்க கட்டடத்தை கட்டி வருகிறது. அந்த கட்டடத்தின் இறுதி பணிகள் நடைபெற்றுவரும் நிலையில், தற்போதைய கட்டுமான நிலவரம் பற்றிய வீடியோ ஒன்றை நடிகர் சங்கம் மற்றும் நடிகை சாய் தன்ஷிகா தற்போது வெளியிட்டுள்ளார். அந்தஅதன் தலைவர் நாசர் குரலில் ஒவ்வொரு தளத்திற்கான கட்டுமான நிலவரம் எப்படி உள்ளது என்ற வீடியோ அதில் உள்ளது. அந்த வீடியோவில் நாசர், “பெரிய ஒரு கனவு, நாங்கள் எடுத்துக் கொண்ட கடமை, இன்று நடப்பில், விலைவில் நிறைவுறும், கனவு நனவாகும், வானுயர ஓங்கி நிற்கும் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பெருமை” எனக் கூறியுள்ளார்.
Finally the vision coming together!! #Nadigarsangambuilding @VishalKOfficial pic.twitter.com/wzpYEYApH1
— சாய் தன்ஷிகா (@SaiDhanshika) June 16, 2025
நடிகர் சங்க கட்டடம் ஆடிட்டோரியம், கன்வென்ஷன் ஹால், மினி கன்வென்ஷன் ஹால், டைனிங் ஹால், சங்க அலுவலகம், வாடகைக்கு விடப்பட உள்ள அலுவலக தளம், பார்க்கிங் தளம் ஆகியவை ஏறக்குறைய முடிவடையும் நிலையில் உள்ளவை அந்த வீடியோவில் இடம் பெற்றுள்ளன. நடிகர் சங்க செயலாளர் நடிகர் விஷால், சமீபத்தில்தான் நடிகை சாய் தன்ஷிகாவைக் காதலிப்பதாகவும், நடிகர் சங்க கட்டடத்தில்தான் தனது திருமணம் நடைபெறும் என்றும் அறிவித்திருந்தார். இந்நிலையில் நடிகை சாய் தன்ஷிகா, நடிகர் சங்க கட்டடப் பணிகள் தற்போது இறுதி கட்டடத்தை எட்டியுள்ளதாக வீடியோவை வெளியிட்டுள்ளார். நடிகர் சங்கக் கட்டிடத்தில் நடக்கும் முதல் திருமணமாக விஷால்- சாய் தன்ஷிகா திருமணம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.