பிரபல நடிகையை இரண்டாம் திருமணம் செய்கிறாரா நாக சைதன்யா..!
தெலுங்கு நடிகர் நாக சைதன்யா மற்றும் நடிகை சமந்தா இருவரும் காதலித்து 2017ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். பிரமாண்டமாக இந்த திருமணம் நடந்தது.4 ஆண்டுகள் இருவரும் இணைந்து வாழ்ந்து வந்த நிலையில் 2021ஆம் ஆண்டு தங்களுடைய பிரிவை அறிவித்தனர். இது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்தது. கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்துவிட்டதாக சொல்லப்படுகிறது.
சமந்தவுடனான விவாகரத்துக்கு பின் நடிகர் நாக சைதன்யா பிரபல நடிகை சோபிதா துள்ளிப்பாளா என்பவருடன் டேட்டிங் செய்து வருவதாக கிசுகிசுக்கள் எழுந்தன. அதற்கு ஏற்றாற்போல் இருவரும் ஒன்றாக இருக்கும் சில புகைப்படங்களும் இணையத்தில் வெளிவந்து நெட்டிசன்களால் வைரலாக்கப்பட்டது.இந்த நிலையில், நாக சைதன்யா நடிகை சோபிதாவை இரண்டாம் திருமணம் செய்து கொள்ளப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்று இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடக்கவிருக்கிறது என்றும் தெலுங்கு ஊடகங்கள் மத்தியில் பேச்சு எழுந்துள்ளது.ஆனால், இதுவரை நாக சைதன்யா மற்றும் சோபிதா தரப்பில் இருந்து இதுகுறித்து எந்த ஒரு அதிகாரப்பூர்வமான தகவலும் வெளிவரவில்லை. ஆகையால் இது எந்த அளவிற்கு உண்மையான செய்தி என்றும் தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.