நாகசைதன்யா 2-வது திருமணம்.. 2027-ல் விவாகரத்து.. சர்ச்சையில் சிக்கிய ஜோதிடர்
1723706259350
நடிகை சமந்தாவை விவாகரத்து செய்த நாக சைதன்யாவுக்கும், மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் படத்தில் வானதி கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமான சோபிதா துலிபாலாவுக்கும் காதல் மலர்ந்து நிச்சயதார்த்தம் முடிந்துள்ளது. விரைவில் திருமணம் நடக்க உள்ளது.இந்த நிலையில் பிரபல ஜோதிடர் ஒருவர் நாகசைதன்யா சோபிதா துலிபாலா ஜாதகத்தை பரிசீலித்ததாகவும் பொருத்தம் சரியில்லை என்றும் இருவரும் 2027-ல் பிரிந்து விடுவார்கள் என்றும் அவர்களின் பிரிவுக்கு ஒரு பெண் காரணமாக இருப்பார் என்றும் கருத்து தெரிவித்து இருந்தார்.இந்த தகவல் வலைத்தளத்தில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. ஜோதிடர் கருத்துக்கு எதிர்ப்புகள் கிளம்பின. தெலுங்கு சினிமா சங்கங்கள் சார்பில் மகளிர் ஆணையத்தில் ஜோதிடர் மீது புகார் செய்யப்பட்டது. கேட்காமலே மற்றவர்கள் வாழ்க்கையில் புகுந்து ஜாதகம் பார்த்து பகிரங்கமாக வெளியிடுவது தவறு என்றும் கண்டித்தனர். இதையடுத்து தெலுங்கு மகளிர் ஆணையம் ஜோதிடருக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. வருகிற 22-ம் தேதி விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என்று நோட்டீசில் குறிப்பிடப்பட்டு உள்ளது.