ஏரியை ஆக்கிரமித்து கட்டப்பட்ட நாகர்ஜுனாவின் கன்வென்ஷன் சென்டர் இடிப்பு
1724492721000
ஐதராபாத்தின் மாதப்பூர் நகரில் பிரபல நடிகர் நாகர்ஜுனாவிற்கு சொந்தமாக 'என் கன்வென்ஷன் சென்டர்' என்ற கட்டிடம் உள்ளது. இதில் திருமணங்கள், கார்ப்பரேட் நிகழ்வுகள் நடைபெற்று வந்தன. இந்த கட்டிடம் ஏரியை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளதாக கூறி அதிகாரிகள் இன்று காலை முதல் அதனை இடிக்க துவங்கியுள்ளனர். இந்த கட்டடம் 10 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது. 10 ஏக்கரில் கிட்டத்தட்ட 3 ஏக்கர் தும்மிடிகுண்டா ஏரியை ஆக்கிரமித்து கட்டப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.