தேசிய விருது வென்றுள்ள திரைப்படங்கள் இடம்பெற்றுள்ள ஒடிடி தளங்கள் என்ன?

National award

70வது தேசிய திரைப்பட விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டது. இதன்படி, கடந்த 2022இல் தணிக்கை செய்யப்பட்டதில் சிறந்து விளங்கிய திரைப்படங்களுக்கு நேற்று தேசிய விருது அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், தேசிய விருதுகள் பெற்றுள்ள திரைப்படங்கள் இடம்பெற்றுள்ள ஒடிடி தளங்கள் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.

 மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, கார்த்தி, ஜெயம் ரவி உள்ளிட்ட பலர் நடித்து கடந்த 2022இல் வெளியான படம் 'பொன்னியின் செல்வன் பாகம் 1'. கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட பொன்னியின் செல்வன் பாகம் 1 நான்கு தேசிய விருது வென்றுள்ளது. இப்படம் அமேசான் பிரைம் ஒடிடி தளத்தில் கிடைக்கிறது.PS1

மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் தனுஷ், நித்யா மேனன், ப்ரியா பவானி ஷங்கர், பாரதிராஜா உள்ளிட்ட பலர் நடித்த திரைப்படம் ‘திருச்சிற்றம்பலம்’. இப்படத்திற்காக நித்யா மேனன் சிறந்த நடிகைக்கான தேசிய விருதையும், தாய் கெழவி பாடலுக்காக சிறந்த நடன இயக்குநருக்கான தேசிய விருதை ஜானி மற்றும் சதீஷ் ஆகியோர் வென்றுள்ளனர். இப்படம் அமேசான் பிரைம் ஒடிடி தளத்தில் இடம்பெற்றுள்ளது.

ரிஷப் ஷெட்டி இயக்கத்தில், அவரது அற்புதமான நடிப்பில் வெளியான திரைப்படம் ‘காந்தாரா’. குலதெய்வ வழிபாட்டின் முக்கியத்துவத்தை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட காந்தாரா நாடு முழுவதும் பெரும் வரவேற்பை பெற்று பேசுபொருளானது. சிறந்த பொழுதுபோக்கு திரைப்படத்திற்கான தேசிய விருது காந்தாரா படத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படம் அமேசான் ஒடிடி தளத்தில் கன்னடம், தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் ஒளிபரப்பாகிறது. மேலும், இந்தி மொழியில் டப்பிங் செய்யப்பட்டு நெட்ஃபிளிக்ஸ் ஒடிடி தளத்தில் இடம்பெற்றுள்ளது.

kanthara


ஆனந்த் ஏகர்சி இயக்கிய 'ஆட்டம்' திரைப்படம், சிறந்த திரைக்கதை, சிறந்த மலையாள படம், சிறந்த படத்தொகுப்பு ஆகிய பிரிவுகளில் தேசிய விருது வென்றுள்ளது. ஆட்டம் திரைப்படம் அமேசான் பிரைம் ஒடிடி தளத்தில் இடம்பெற்றுள்ளது.


 அயன் முகர்ஜி இயக்கத்தில் ரன்பீர் கபூர், அலியா பட் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான படம் ‘பிரம்மாஸ்தரா பாகம் 1 சிவா’. இப்படத்திற்காக ப்ரிதம் சிறந்த இசையமைப்பாளர் விருதையும், இப்படத்தில் இடம்பெற்றுள்ள கேசரியா (kesariya) பாடல் பாடிய அரிஜித் சிங், சிறந்த பின்னணி பாடகருக்கான விருதையும் வென்றுள்ளார். இப்படம் டிஸ்னி ஹாட்ஸ்டார் ஒடிடி தளத்தில் இடம்பெற்றுள்ளது.

unnchai


ஊன்சாய் படத்தை இயக்கிய சூரஜ் பர்ஜாத்யா சிறந்த இயக்குநர் விருதும், நீனா குப்தா சிறந்த துணை நடிகை விருதும் பெறவுள்ளார். இப்படம் ஜீ5 ஒடிடி தளத்தில் இடம்பெற்றுள்ளது.


 குல்மகர் படத்திற்காக சிறந்த வசனத்திகான விருதை அர்பிதா முகர்ஜி மற்றும் ராகுல் வி சித்தேலா ஆகியோரும்,சிறப்பு விருதை மனோஜ் பாஜ்பாயும் பெறவுள்ளனர். குல்மகர் திரைப்படம் ஹாட்ஸ்டார் ஒடிடி தளத்தில் இடம்பெற்றுள்ளது.

Share this story