National Film Awards : விருதுகளை குவித்த பொன்னியின் செல்வன் – 1

Ponniyin selvan 1

பொன்னியின் செல்வன் -1 படத்திற்கு சிறந்த தமிழ் மொழி திரைப்படத்திற்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய‌ அரசு ஒவ்வொரு ஆண்டும் தேசிய திரைப்பட விருதுகள் வழங்கி வருகிறது. இதில் சிறந்த நடிகர், நடிகை, இயக்குநர் தேர்ந்தெடுக்கப்பட்டு பல்வேறு பிரிவுகளில் விருது வழங்கி வருகிறது. கடந்த ஆண்டு புஷ்பா, கங்குபாய் ஆகிய படங்கள் தேசிய விருதுகள் பெற்றன.இந்நிலையில் 70வது தேசிய திரைப்பட விருது இன்று (ஆக.16) அறிவிக்கப்பட்டது. இதன்படி இந்த முறை 2022ஆம் ஆண்டு தணிக்கை செய்யப்பட்ட திரைப்படங்களுக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டன.

ARRahman

இதில் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ‘பொன்னியின் செல்வன் முதல் பாகம்’ (Ponniyin selvan 1) படத்திற்கு சிறந்த தமிழ் மொழி திரைப்படத்திற்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பொன்னியின் செல்வன் படத்திற்காக ஏ.ஆர். ரகுமானுக்கு சிறந்த பின்னணி இசையமைப்பாளருக்கான தேசிய விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Share this story