இனி இவருக்கு பதில் இவர்... மலர் சீரியலில் பிரீத்தி ஷர்மாவிற்கு பதிலாக நடிக்கப்போவது இவர்தான்
1719902757659

சன் டிவியில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் தான் மலர். மதிய வேளையில் ஒளிபரப்பாகி வரும் இந்த தொடரில் ப்ரீத்தி ஷர்மா நாயகியாக நடிக்க அக்னி ஹீரோவாக நடித்து வந்தார். திடீரென சில காரணங்களால் அக்னி இந்த சீரியலில் இருந்து வெளியேறிய நிலையில் தற்போது பிரீத்தி ஷர்மாவும் வெளியேறியுள்ளார்.
சமீபத்தில் இது குறித்த தகவல் பரவிய நிலையில் தற்போது பிரீத்தி சர்மாவுக்கு பதிலாக மலர் சீரியலில் நாயகி ஆக நடிக்கப் போவது யார் என்ற கேள்விக்கு பதில் கிடைத்துள்ளது. அதாவது, விஜய் டிவியில் ஒளிபரப்பாகி முடிவுக்கு வந்த பிரபலமான சீரியல் மோதலும் காதலும்.
இந்த சீரியலில் வேதாவாக நடித்து வந்தவர் அஸ்வதி. இவர் தான் தற்போது மலர் சீரியலில் நாயகியாக நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.