பிரபல பாடகி கொடுத்த பிறந்தநாள் பார்டியில் போதை பொருள் புழக்கம்- போலீஸ் வழக்குப்பதிவு

ச்

பாடகி மங்லி கொடுத்த பிறந்தநாள் பார்டியில் போதை பொருள் பயன்படுத்தியதாக போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

Shock at Singer Mangli's Birthday Bash: Drugs Seized, 9 Test Positive!

தெலுங்கு, தமிழ், கனடா, உள்ளிட்ட பல மொழிகளில் பாடி பிரபலமானவர். இந்த நிலையில்  ஐதராபாத் செவெல்லாவில் உள்ள திரிபுரா ரிசார்ட்டில்  தனது பிறந்தநாள் விழாவை நடத்தினார். இந்த  ரிசார்ட்டில் போலீசார் திடீர் சோதனை நடத்தியதில் அதிக அளவு கஞ்சா மற்றும் வெளிநாட்டு மதுபானங்களை பறிமுதல் செய்தனர். விருந்துக்கு வந்தவர்களிடம் போதைப்பொருள் சோதனைகள் நடத்தப்பட்டன. அவர்களில் பலருக்கு கஞ்சா அருந்தியது உறுதி செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து செவெல்லா போலீசார் மங்லி , ரிசார்ட் மேலாளர் சிவராமா கிருஷ்ணா  மீது வழக்குப்பதிவு செய்தனர்.  இந்த பார்ட்டியில் பல பாடகர்கள், பாடகிகள் மற்றும் சினிமாத்துறையை சார்ந்த பலர்  வந்ததாக கூறப்படுகிறது. அவர்கள் மீதும் வழக்குப்பதிவு இருக்குமா என்பது தெலுங்கு  சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Share this story