பிரபலம் ஓபன் டாக் : சின்மயிக்கு நியாயம் கிடைக்கல.. அவர்கள் செய்தது துரோகம்..!

1

இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன், தற்போது பாடகி சின்மயி பற்றிய தனது கருத்துகளால் மீண்டும் மீடியா வட்டாரங்களில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளார்.

சமீபத்திய நேர்காணலில் கலந்துகொண்டு பேசிய அவர், சின்மயி மீது ஏற்பட்ட தடை, திரைப்பட சங்கத்தின் செயல்கள் மற்றும் தமிழ் சினிமாவில் உள்ள ஆணாதிக்கச் சூழல் குறித்து மிகச் சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார்.

ஜேம்ஸ் வசந்தன், “என்னுடைய முழுமையான ஆதரவு சின்மயிக்குத் தான். அவர் மீது தமிழ்த் திரைப்பட சங்கம் பண்ணது துரோகம். அவர் உண்மை பேசினதற்காக, தண்டனை கொடுக்கப்பட்டது." எனத் தெரிவித்திருந்தார்.

ஜேம்ஸ் வசந்தன் மேலும் , “அவங்களுக்கு குறைந்த பட்ஷ ஆதரவினை கொடுக்கவில்லை என்றால் கூடப் பரவாயில்ல எதிர்க்காமல் இருந்திருக்கலாம். அவங்களையே குற்றப்படுத்தி வெளியே அனுப்புறீங்க என்றால் நீங்க எல்லாம் ஆம்பளைங்களா.? கோழைகள் சங்கத்தில் உட்கார்ந்திருப்பது தான் காரணம் என்று நான் நினைக்கிறேன். தவறு பண்ணவங்க நல்லா இருக்காங்க. உண்மையை சொன்னவளுக்கு இந்த தண்டனை. வாழ்க்கையில் அனுபவசாலிகள் பெரியவர்கள் ரொம்ப மட்டமாக நடந்து கொண்டதால் சின்மயி உயர்ந்துவிட்டால்." எனவும் கூறியிருந்தார்.

ஜேம்ஸ் வசந்தனின் இந்த நேர்காணல், தமிழ் சினிமா சூழ்நிலையில் ஒரு புது அலையை உருவாக்கியுள்ளது. சினிமாவில் பெண்களது உரிமைகளைப் பாதுகாப்பது, தவறான முடிவுகள் எடுக்கப்படாமல் இருக்கச் செய்யும் போராட்டம் இவை அனைத்தும் இத்தருணத்தில் மீண்டும் பேசப்பட வேண்டியவையாக இருக்கின்றன.

Share this story