நயன்தாரா குறித்து சர்ச்சை கருத்து… மீண்டும் சிக்கிக்கொண்ட நடிகர் ராதாரவி…

நயன்தாரா குறித்து  சர்ச்சை கருத்து…  மீண்டும் சிக்கிக்கொண்ட நடிகர் ராதாரவி…

உதயநிதிக்கும் நயன்தாராவிற்கும் என்ன உறவு என கூறி நடிகர் ராதாரவி மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

சர்ச்சையையும், ராதாரவியையும் பிரிக்கவே முடியாது. ஏனென்றால் அவ்வெவ்போது சில கருத்துக்களை கூறி சர்ச்சையில் சிக்கிக்கொள்வார். முன்னணி நடிகராக உள்ள இவர், அரசியலில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார். முதலில் அதிமுகவில் இருந்த இவர், சில பிரச்சனைகளால் அக்கட்சியிலிருந்து விலகி திமுகவில் ஐக்கியமானார்.

நயன்தாரா குறித்து  சர்ச்சை கருத்து…  மீண்டும் சிக்கிக்கொண்ட நடிகர் ராதாரவி…

திமுகவில் கட்சிப்பணி ஆற்றி வந்த ராதாரவி, சினிமாவிலும் நடித்து வந்தார். இதையடுத்து கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சினிமா நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக்கொண்டார். அப்போது பேசிய அவர், நடிகை நயன்தாரா, ஒரே நேரத்தில் பேயாகவும், சீதாவாக நடிக்கிறார். அந்த காலங்களில் கடவுள் கேரக்டரில் நடிக்க வேண்டுமென்றால் கே.ஆர்.விஜயா போன்ற முன்னணி நடிகைகளைதான் தேடுவார்கள். ஆனால் இப்போது நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. யார் வேண்டுமானாலும் நடிக்கலாம் என்ற நிலை உருவாகிவிட்டது என்று பேசினார். இந்த கருத்து பெரிய சர்ச்சையை உண்டாக்கியது. இதனால் திமுகவிலிருந்து அதிரடியாக ராதாரவி நீக்கப்பட்டார்.

நயன்தாரா குறித்து  சர்ச்சை கருத்து...  மீண்டும் சிக்கிக்கொண்ட நடிகர் ராதாரவி...

இதையடுத்து பா.ஜ.கவில் இணைந்து பணியாற்றி வருகிறார். தற்போது தேர்தல் நேரம் என்பதால் தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகிறார். அப்போது தன்னுடைய வழக்கமான பாணியில் பேச தொடங்கிய ராதாரவி, நயன்தாரா பற்றி பேசியதால் திமுக கட்சி என்னை இடைநீக்கம் செய்தது. இதனால் அந்த கட்சியிலிருந்து வெளியேறி பா.ஜ.கவில் இணைந்தேன். நயன்தாரா யாரு? திமுகவின் கொள்கைப்பரப்பு செயலாளரா? திமுகவிற்கும் நயன்தாராவிற்கும் என்ன உறவு? என கேள்வி எழுப்பினார். அதன்பிறகு உதயநிதிக்கும் நயன்தாராவிற்கும் உறவு என்றால், அதற்கு நான் என்ன செய்ய முடியும்’ என சரமாரியாக கேள்விகளை அடுக்கினார். இந்த கருத்து மீண்டும் சர்ச்சையாகி உள்ளதால் சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி வருகிறது.

Share this story