ரஹ்மான் இசை நிகழ்ச்சி - ரூ.50,000 இழப்பீடு வழங்க உத்தரவு

ar rahman

ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சியை காண முடியாதவருக்கு இழப்பீடு  வழங்க நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

ar rahman

கடந்த 2023 ஆம் ஆண்டு உலகப் புகழ்பெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின்  ‘மறக்குமா நெஞ்சம்?’ எனும் இசை நிகழ்ச்சி விழாவில் குளறுபடிகளும், சிரமங்களும் ஏற்பட்டன.
இடங்களை ஒதுக்கீடுசெய்வதில் ஏற்பட்டக் குழப்பங்களினாலும், போக்குவரத்து நெரிசலில் சிக்குண்டதால் நேர்ந்த பாதிப்புகளினாலும் டிக்கெட் வாங்கிய சிலர் இசை நிகழ்ச்சிகளை பார்க்காமல் திரும்பி சென்றனர். அதனை உணர்ந்தே சகோதரர் ஏ.ஆர்.ரகுமான் அவர்கள் தார்மீக அடிப்படையில், நடந்தத் தவறுகளுக்குத் தானே பொறுப்பேற்றுக் கொள்வதாகக் கூறி வருந்தியிருக்கிறார். மேலும், இந்நிகழ்ச்சியைச் சரிவர காண இயலாது பாதிக்கப்பட்டதாக தெரிவித்தப் பார்வையாளர்களுக்கு அவர்களுக்குரிய நுழைவுச்சீட்டுக் கட்டணத்தைத் திருப்பித் தருவதாக ஒப்புக்கொண்டார்.

இந்நிலையில்  ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சிக்கு டிக்கெட் எடுத்தும் பார்க்காதவருக்கு ரூ.50,000 இழப்பீடு, வழக்கு செலவாக ரூ.5,000 வழங்க ஏசிடிசி நிறுவனத்திற்கு நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 2023ல் சென்னை ஈசிஆரில் ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சி மழையால் ரத்து செய்யப்பட்டது. ஆக.12இல் மீண்டும் நடந்த நிகழ்ச்சிக்கு முறையான முன்னறிவிப்பு செய்யவில்லை, ரூ.10,000 டிக்கெட் எடுத்தும் வாகன நெரிசலால் நிகழ்ச்சியை காண முடியாததால் மன உளைச்சல் ஏற்பட்டதாக மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

Share this story