“என் கணவருடன் சமந்தா நெருக்கம்”- கடுப்பான பிரபல இயக்குநரின் மனைவி

ச்

இயக்குநர் ராஜ் நிடிமோரு, நடிகை சமந்தா இருவரும் நெருக்கமாக இருப்பது குறித்து செய்திகள் வெளியாகிவருவதால் ராஜ் நிடிமோரின் மனைவி ஷ்யாமிலி காட்டமாக இன்ஸ்டாவில் இதுகுறித்து கருத்து கூறியுள்ளார்.

Raj Nidimoru's wife, Shyamali De, shares a cryptic post amid Samantha  dating rumors | - The Times of India


தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் நடித்து வரும் சமந்தா, இயக்குனர் ராஜ் நிடிமொரு என்பவரைக் காதலிப்பதாக கடந்த சில மாதங்களாக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. இருவரும் இருக்கும் புகைப்படங்களை சமீப காலமாக வெளியிட்டு வருகிறார் சமந்தா. திருப்பதிக்குச் சென்று இருவரும் ஒன்றாக சாமி தரிசனம் செய்த வீடியோக்களும் வெளிவந்தன. சமந்தா சொந்தமாக டிரலாலா மூவிங் பிக்சர்ஸ் என்ற படத் தயாரிப்பு நிறுவனம் ஒன்றை ஆரம்பித்திருந்தார். அதன் முதல் தயாரிப்பான 'சுபம்' படம் வெளியாகி ஓடிக் கொண்டிருக்கும் சூழலில் அப்படக்குழுவினருடன் இருக்கும் புகைப்படங்களை சமந்தா பகிர்ந்திருந்தார். படத்தைப் பாராட்டி அவரது அம்மா பேசிய வீடியோவையும் வெளியிட்டுள்ளார். அந்தப் பதிவில் ராஜ் நிடிமொருவின் தோளில் சாய்ந்துள்ள  ஒரு புகைப்படத்தையும் சேர்த்து வெளியிட்டார். 

Gallery

ஏற்கனவே இயக்குநர் ராஜ் நிடிமோரு, நடிகை சமந்தா இருவரும் நெருக்கமாக இருப்பது குறித்த செய்திகள் வெளியான நிலையில், இந்த புகைப்படம் மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் இயக்குநர் ராஜ் நிடிமோருவின் மனைவி ஷ்யாமிலி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “நம்பிக்கைதான் ரொம்பவே விலை உயர்ந்தது. ஒருமுறை அது போய்விட்டால் எவ்வளவு விலை கொடுத்தாலும் மீண்டும் கிடைக்காது” எனக் குறிப்பிட்டுள்ளார். 2015 ஆம் ஆண்டு முதல் ராஜ் நிடிமொருவை மணந்த ஷ்யாமலி, திரைப்படத் துறையில் நன்கு அறியப்பட்டவர். உளவியல் பட்டதாரியான இவர், ராகேஷ் ஓம்பிரகாஷ் மெஹ்ரா மற்றும் விஷால் பரத்வாஜ் போன்ற புகழ்பெற்ற திரைப்படத் தயாரிப்பாளர்களுடன் உதவி இயக்குநராகப் பணியாற்றியுள்ளார். 'ரங் தே பசந்தி ' மற்றும் 'ஓம்காரா' போன்ற குறிப்பிடத்தக்க படங்களுக்கு திரைக்கதை எழுத்தாளராகவும் பணியாற்றியுள்ளார்.
 

Share this story