பேரனை வாழ்த்திய ரஜினிகாந்த் -மகனை கட்டியணைத்த தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா -ஏன் தெரியுமா ?

நடிகர் ரஜினியின் பேரன் யாத்ராவின் பள்ளி விழாவில் அவரின் பெற்றோர் தனுஷ் மற்றும் ஐஸ்வரியா கலந்து கொண்ட நிகழ்ச்சி சமூக ஊடகத்தில் வைரலாகி வருகிறது .
நடிகர் ரஜினிகாந்த்தின் மகள் ஐஸ்வர்யாவும் ,இயக்குனர் மற்றும் நடிகருமான தனுஷும் கடந்த 2004ம் ஆண்டு வெகு விமர்சையாக திருமணம் செய்து கொண்டனர் .இந்த திருமணத்திற்கு பல அரசியல் தலைவர்கள் முதல் சினிமா பிரபலம் வரை கலந்து கொண்டு மணமக்களை வாழத்த்தினர் .அந்த தம்பதிகள் மகிழ்ச்சியாக வாழ்ந்து இரண்டு பிள்ளைகள் பெற்றெடுத்தனர்
இந்நிலையில் அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து விட்டனர் . இந்நிலையில் அவர்களின் மூத்த மகன் யாத்ரா பள்ளி படிப்பை முடித்து விட்டார் .இதற்கு அவரின் பள்ளியில் சான்றிதழ் வழங்கும் விழா நடைபெற்றது ,அந்த விழாவில் யாத்ராவின் பெற்றோர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா கலந்து கொண்டு தங்களின் மகனை கட்டி பிடித்து வாழ்த்தினர் .இந்த போட்டோ சமூக ஊடகத்தில் வைரலாகி வருகிறது .மேலும்
அதனை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் தனது பேரன் யாத்ராவை வாழ்த்தி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், "என் அன்புக்குரிய பேரனின் முதல் மைல்கல். வாழ்த்துகள் யாத்ரா கண்ணா" என்று நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார். பலரும் அவரது பதிவில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.இந்த வாழ்த்துக்கள் சமூக ஊடகத்தில் வைரலாகி வருகிறது