உஸ்தாத் ராம் பொதினேனி - பூரி ஜெகன்நாத் கூட்டணியில் உருவான 'டபுள் ஐஸ்மார்ட்' படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ்
உஸ்தாத் ராம் பொதினேனி நடிப்பில், இயக்குநர் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் அதிக பொருட்செலவில் உருவாகியுள்ள பான் இந்திய திரைப்படமான 'டபுள் ஐஸ்மார்ட்' படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.நல்லதுக்கும் தீயதுக்கும் இடையில் நடக்கும் போர் பற்றியும் இருபெரும் சக்திகளுக்கு இடையேயான மோதலையும், இளமை ததும்பும் காதல், அம்மா செண்டிமெண்ட், இயக்குநர் பூரியின் டிரேட் மார்க்கான மாஸ், ஆக்ஷன் என டிரெய்லர் அனைத்து கமர்ஷியல் விஷயங்களையும் கொண்டுள்ளது. குறிப்பாக, டிரெய்லரில் இடம்பெற்றிருக்கும் வசனங்கள் புல்லட் போல ரசிகர்களைக் கவர்ந்துள்ளது. ஸ்டைலிஷான காட்சிகளும் கிளைமாக்ஸில் வரும் சிவலிங்கத்தின் பிரம்மாண்டமும் ரசிகர்கள் இடையே எதிர்பார்பை அதிகரித்துள்ளது. 'டபுள் ஐஸ்மார்ட்' திரைப்படம் ஆகஸ்ட் 15 ஆம் தேதி சுதந்திர தினத்தன்று தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகிறது.