குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு இன்ப அதிர்ச்சி கொடுத்த பாடகி ரம்யா NSK..

குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு இன்ப அதிர்ச்சி கொடுத்த பாடகி ரம்யா NSK..

நடிகர் NS கிருஷ்ணனின் பேத்தியும், பிரபல பின்னணி பாடகியுமான  ரம்யா என்.எஸ்.கே ‘காதலில் விழுந்தேன்’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘உனக்கென நான்’ பாடல் மூலம் பிரபலமானவர்.  இதனைத்தொடர்ந்து  தமிழ், தெலுங்கு, மலையாலம் மற்றும் கன்னடம் என பல மொழிகளிலும் பாடல்களை பாடி வருகிறார். முன்னணி இசையமைப்பாளர்கள் அனைவருடனும் இணைந்து பணியாற்றியுள்ளார்.
குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு இன்ப அதிர்ச்சி கொடுத்த பாடகி ரம்யா NSK..
‘பிக் பாஸ் 2’ நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமான ரம்யா, குறுகிய காலத்திலேயே அந்த நிகழ்ச்சியிலிருந்து வெளியேறினார். இவர் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சின்னத்திரை நடிகர் சத்யாவை திருமணம் செய்துகொண்டார்.. இவர் தற்போது தனக்குக் குழந்தை பிறந்துள்ளதாக அறிவித்திருக்கிறார்..
குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு இன்ப அதிர்ச்சி கொடுத்த பாடகி ரம்யா NSK..
 
இதுகுறித்து இன்ஸ்டகிராமில் பதிவிட்டுள்ள அவர், “ நான் அதிகம் உடல் எடை கூடி விட்டதாக பலர் அடிக்கடி என்னிடம் கேட்டு வந்தார்கள்..  நானும் அந்த கேள்விகளுக்கு விரைவில் பதிலளிக்கிறேன் என்று சொல்லிக்கொண்டே இருந்தேன். இதோ அந்த கேள்விக்கான பதில் “நான் ஒரு குழந்தையை பெற்றெடுத்திருக்கிறேன் என்பதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். அதனால் தான்….. இதற்கு மேல் எனது உடல்நலம் மற்றும் உடற்பயிற்சிகளிலும் நான் கவனம் செலுத்தப் போகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.
குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு இன்ப அதிர்ச்சி கொடுத்த பாடகி ரம்யா NSK..

Share this story