பிரபல வில்லன் நடிகரின் மகனுக்கு டும்.. டும்.. டும்..

Riyaz khan son


பிரபல வில்லன் நடிகர் ரியாஸ் கான் மற்றும் உமா ரியாஸ் கான் தம்பதியின் மூத்த மகனான ஷாரிக் ஹாசனுக்கு இன்று கோலாகலமாக திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்தில் சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை நடிகர், நடிகைகள் கலந்து கொண்டு மணமக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர். சினிமாவில் பல ஆண்டுகளாக வில்லன் நடிகராக மிரட்டிக்கொண்டு இருக்கும் ரியாஸ் கானை காதலித்து திருமணம் செய்து கொண்டார் உமா ரியாஸ் கான். இந்த தம்பதியருக்கு ஷாரிக் ஹாசன் மற்றும் சமர்த் ஹாசன் என இரு மகன்கள் உள்ளனர். இதில், ஷாரிக் ஹாசன் விஜய் டிவியின் பிக் பாஸ் சீசன் 3ல் கலந்து கொண்டு பிரபலமானார்.

Sharik hasan

இதைத் தொடர்ந்து விஜய் டிவியில் பிக் பாஸ் ஜோடி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நடனமாடி அசத்தினார்.தற்போது ஒரு சில படத்தில் சின்ன சின்ன காட்சியில் நடித்து வருகிறார்.ஷாரிக் ஹாசன் மரியா ஜெனிஃபர் என்பவரை காதலித்து வந்த நிலையில், காதலை பெற்றோரிடம் சொல்லி இருவீட்டாரின் சம்மதத்துடன் இன்று அடையாறில் உள்ள ஒரு பிரபலமான நட்சத்திர ஹோட்டலில் திருமணம் நடைபெற்றது. மரியா கிறிஸ்துவ மதத்தைச் சேர்ந்தவர் என்பதால் கிறிஸ்தவ முறைப்படி மணப்பெண் உடை அணிந்திருந்தார். அதே போல ஷாரிக் ஹாசனும், வெள்ளை நிறத்தில் கோர்ட் ஷூட் அணிந்திருந்தார். இந்த திருமணத்தில் சின்னத்திரை, வெள்ளித்திரை பிரபலங்கள் பலர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தியிருக்கின்றனர்.

Share this story