ரவி மோகன் படத்தில் இணையும் எஸ்.ஜே.சூர்யா!

1

ரவி மோகன் நடிப்பில் உருவாகும் மற்றொரு திரைப்படம் பற்றிய மாஸ் அப்டேட் வெளியாகி உள்ளது. அதன்படி அப்படத்தை கார்த்திக் யோகி இயக்க உள்ளார். இவர் இதற்கு முன்னர் சந்தானம் நடித்த வடக்குப்பட்டி ராமசாமி, டிக்கிலோனா போன்ற திரைப்படங்களை இயக்கி இருக்கிறார். இப்படத்தை டபுள் ஹீரோ சப்ஜெக்ட் ஆக அவர் உருவாக்க உள்ளதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே ஒரு ஒரு ஹீரோவாக ரவி மோகன் கமிட்டாகிவிட்ட நிலையில், அவருடன் மற்றொரு ஹீரோவாக எஸ்.ஜே.சூர்யா நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுவரை இவர்கள் இருவரும் இணைந்து பணியாற்றியதே இல்லை. இந்த கூட்டணி உறுதியானால் ரவி மோகனும், எஸ்.ஜே.சூர்யாவும் இணைந்து பணியாற்றும் முதல் படமாக இது அமையும்.

நடிகர் ஜெயம் ரவி கடந்த ஜனவரி மாதம் தனது பெயரை ரவி மோகன் என மாற்றினார். 'காதலிக்க நேரமில்லை' படத்தின் வெளியீட்டிற்கு முன்பே இவர் பெயரை மாற்றினார். ஆனால், இப்படம் தோல்வியடைந்தது. கிருத்திகா உதயநிதி இயக்கிய இப்படம் வெறும் 9.67 கோடி மட்டுமே வசூலித்தது. அதுமட்டுமின்றி ரவி மோகன் அதற்கு முன் நடித்த 'பிரதர்' படமும் தோல்வியடைந்தது. இதனால் ஹிட் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் அடுத்தடுத்த படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார்.

Share this story