சுப்பிரமணியபுரம் நடிகர் காலமானார்!

சுப்பிரமணியபுரம் நடிகர் காலாமானார்!

குணச்சித்திர நடிகர் முருகன் என்ற மொக்கைச் சாமி காலமானார்.

கடந்த 2008 ஆம் ஆண்டு சசிகுமார் இயக்கத்தில் ஜெய், சுவாதி, சமுத்திரகனி, கஞ்சா கருப்பு உள்ளிட்டோர் நடித்து வெளியான படம் சுப்பிரமணியபுரம். ஜேம்ஸ் வசந்தன் இசையமைத்த இப்படம், நட்பு, துரோகம், காதல், தடம் மாறும் இளைஞர்களின் வாழ்க்கை என பல்வேறு கோணங்களில் உருவாக்கப்பட்டிருந்தது. இந்த படத்தில் ஊர் தலைவராக மொக்கசாமி என்ற கதாபாத்திரத்தில் முருகன் என்பவர் நடித்து இருந்தார்.  இலைக்கடை  வைத்திருந்த முருகன், பின்னாளில் சுப்ரமணியபுரம் உள்ளிட்ட 5க்கு  மேற்பட்ட படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து புகழ் பெற்றார்.

இந்நிலையில் குணச்சித்திர நடிகர் முருகன் என்ற மொக்கைச் சாமி (78) மாரடைப்பால் காலமானார்.

Share this story