விஜய் பிறந்தநாளில் ரி ரிலீஸ் ஆகும் சூப்பர்ஹிட் படம்!

விஜய்யின் ‘கில்லி’ திரைப்படம் கிட்டத்தட்ட 300க்கும் மேற்பட்ட திரைகளில் ரி ரிலீஸ் செய்யப்பட்டு 20 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்துள்ளதாக சொல்லப்படுகிறது. ரி ரிலீஸில் ஒரு படம் இவ்வளவு தொகை வசூலித்திருப்பது இதுவே முதல் முறை.
அதன் பின்னர் இந்த ஆண்டு ரிலீஸான சச்சின் படமும் 10 கோடி ரூபாய் அளவுக்கு வசூலித்தது. இதையடுத்து முன்னணி நடிகர்களின் படங்கள் தூசு தட்டப்பட்டு ரிலீஸாகி வருகின்றன. இதனால் விஜய்யின் பழையப் படங்கள் அதிகளவில் ரி ரிலீஸ் ஆக வரிசைகட்டி நிற்கின்றன.
அந்த வரிசையில் 8 ஆண்டுகளுக்கு முன்னர் ரிலீஸாகி சூப்பர் ஹிட் ஆன ‘மெர்சல்’ திரைப்படம் ஜூன் 20 ஆம் தேதி ரி ரிலீஸாகவுள்ளது. மெர்சல் படத்தை அட்லி இயக்க தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்தது. சமந்தா, காஜல் அகர்வால் மற்றும் எஸ் ஜே சூர்யா ஆகியோர் நடிக்க ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்திருந்தார்.