சாந்தனு- அதுல்யாவின் கலக்கல் கெமிஸ்ட்ரி… டாக்கு லெஸ்ஸு ஒர்க்கு மோரு முழு வீடியோ வெளியானது!

சாந்தனு- அதுல்யாவின் கலக்கல் கெமிஸ்ட்ரி… டாக்கு லெஸ்ஸு ஒர்க்கு மோரு முழு வீடியோ வெளியானது!

‘முருங்கைக்காய் சிப்ஸ்’ படத்தில் இடம் பெற்றுள்ள டாக்கு லெஸ்ஸு ஒர்க்கு மோரு பாடலின் முழு வீடியோ வெளியாகியுள்ளது.

தரண் குமார் இசையில் சிவாங்கி மற்றும் சாம் விஷால் இருவரும் பாடி வெளியான முருங்கைக்காய் சிப்ஸ் படத்தின் ‘டாக்கு லெஸ்ஸு ஒர்க்கு மோரு’ பாடலின் லிரிக்கல் வீடியோவுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அதையடுத்து தற்போது அந்தப் பாடலின் முழு வீடியோவும் வெளியாகியுள்ளது.

சாந்தனு- அதுல்யாவின் கலக்கல் கெமிஸ்ட்ரி… டாக்கு லெஸ்ஸு ஒர்க்கு மோரு முழு வீடியோ வெளியானது!

அதுமட்டுமில்லாமல் சிவாங்கி பாடகியாக அறிமுகமாகும் முதல் திரைப்படப் பாடல் என்பதாலும் இந்தப் பாடலுக்கு அதிக வரவேற்பு கிடைத்து வருகிறது.

பாடலில் சாந்தனு மற்றும் அதுல்யாவின் கெமிஸ்ட்ரி நன்றாக ஒர்கவுட் ஆகியிருக்கிறது. சாந்தனுவின் துள்ளலான நடனம், அதுல்யாவின் திகட்டாத அழகு, தரண்குமாரின் துடிப்பான இசை ஆகியவை இணைந்து பாடலை முழுமையடையச் செய்துள்ளது.

சாந்தனு- அதுல்யாவின் கலக்கல் கெமிஸ்ட்ரி… டாக்கு லெஸ்ஸு ஒர்க்கு மோரு முழு வீடியோ வெளியானது!

தற்போது டாக்கு லெஸ்ஸு ஒர்க்கு மோரு வீடியோ பாடல் யூடியூபில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

அறிமுக இயக்குனர் ஸ்ரீஜர் இயக்கத்தில் சாந்தனு மற்றும் அதுல்யா நடிப்பில் முருங்கைக்காய் சிப்ஸ் திரைப்படம் உருவாகியுள்ளது. இந்தப் படத்தை லிப்ரா புரொடக்சன்ஸ் ரவீந்தர் சந்திரசேகர் தயாரித்துள்ளார். படத்தின் ரிலீஸ் குறித்து அப்டேட் விரைவில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Share this story