ஜார்ஜியாவில் விஜய்க்கு உற்சாக வரவேற்பு… வைரலாகும் புகைப்படம்…

ஜார்ஜியாவில் விஜய்க்கு உற்சாக வரவேற்பு… வைரலாகும் புகைப்படம்…

‘தளபதி 65’ படத்தின் ஷூட்டிங்கிற்காக ஜார்ஜியா நாட்டிற்கு சென்றுள்ள விஜய்க்கு உற்சாகமாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

ஜார்ஜியாவில் விஜய்க்கு உற்சாக வரவேற்பு… வைரலாகும் புகைப்படம்…

விஜய் நடிப்பில் உருவாகும் ‘தளபதி 65’ படத்தின் பணிகள் தொடங்கிவிட்டன. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தை நெல்சன் இயக்குகிறார். இந்த படத்தின் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். அனிரூத் இசையமைக்கும் இப்படத்தில் அபர்ணா தாஸ், கவின், யோகிபாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளனர். ஒளிப்பதிவாளராக மனோஜ் பரமஹம்சா பணியாற்றுகிறார்.

ஜார்ஜியாவில் விஜய்க்கு உற்சாக வரவேற்பு… வைரலாகும் புகைப்படம்…

அன்பறிவ் சகோதரர்கள் ஸ்டண்ட் பணிகளை கவனிக்கும் இப்படத்தின் முதற்கட்ட பணிகள் நடைபெற்று வந்தன. விஜய் இந்த படத்தில் ரா ஏஜென்ட்டாக நடிப்பதாக கூறப்படுகிறது. இதையடுத்து சமீபத்தில் இந்த படத்தின் படப்பூஜை நிகழ்ச்சி நடைபெற்ற நிலையில் முதற்கட்ட ஷூட்டிங்கை தொடங்குவதற்கான பணிகள் நடைபெற்று வந்தது. இதைத்தொடர்ந்து முதற்கட்ட ஷூட்டிங்கை காஷ்மீரில் நடத்த படக்குழு திட்டமிட்டது. ஆனால் தற்போதைய சூழ்நிலையில் அங்கு ஷூட்டிங் நடத்துவது சாத்தியமில்லை என கூறப்படுகிறது.

ஜார்ஜியாவில் விஜய்க்கு உற்சாக வரவேற்பு… வைரலாகும் புகைப்படம்…

இதனால் காஷ்மீர் போன்று உள்ள ஜார்ஜியாவில் இந்த படத்தை படமாக்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக விஜய் நேற்று அதிகாலை ஜார்ஜியா நாட்டிற்கு புறப்பட்டு சென்றார். அங்கு சென்ற விஜய்க்கு படக்குழுவினரும், அங்குள்ள தமிழர்களும் உற்சாக வரவேற்பை அளித்தனர். இந்த புகைப்படம் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த முதற்கட்ட ஷூட்டிங் ஒரு மாதம் வரை நடைபெறும் என கூறப்படுகிறது.

Share this story